Advertisment

ஷாருக்கானுடன் நீடா அம்பானி, மணமகனுடன் ரஜினிகாந்த் டான்ஸ்: இந்தியாவின் பிரமாண்ட திருமண விழா

திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, அமெரிக்க பிரபலம் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் ஆகியோர் ஜான் செனா மற்றும் ராப்பர் ரீமாவைப் போலவே இந்தியாவில் தரையிறங்கினர்.

author-image
WebDesk
New Update
Anant Ambani Radhika

Anant Ambani Radhika Merchant wedding photos

பல மாத ப்ரீ வெட்டிங் விழாக்களுக்குப் பிறகு, கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவில் திருமணம் செய்து கொண்டனர்.

ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டதால் இது ஒரு அற்புதமான நிகழ்வாக மாறியது. 

அமெரிக்க புகழ் கிம் கர்தாஷியன், பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ், ஹாலிவுட் நடிகர் ஜான் சினா மற்றும் பாலிவுட் ஐகான் சல்மான் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அம்பானி விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, அமெரிக்க பிரபலம் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் ஆகியோர் ஜான் சினா மற்றும் ராப்பர் ரீமாவைப் போலவே இந்தியாவில் தரையிறங்கினர். 

கிம்மின் முதல் இந்திய பயணம் இதுவாகும். பிரிட்டன் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன் ஆகியோரும் வியாழக்கிழமை இரவு இந்தியா வந்தனர். 

Advertisment



மார்ச் மாதம் ஜாம்நகரில் நடந்த பிரீ வெட்டிங் நிகழ்வில் பில் கேட்ஸ், ஹிலாரி கிளிண்டன், ஜாரெட் குஷ்னர், இவாங்கா டிரம்ப், கார்லி க்ளோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் என ஏறக்குறைய 1200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி முழுவதும் மூன்று நாள் கப்பல் பயணத்தில் அம்பானி குடும்பம் பல பிரபலங்களுக்கு விருந்தளித்தது.  இதில் ஷாருக்கான், சாரா அலிகான், ஜான்வி கபூர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

ஆனந்த் அம்பானி கடந்த 1995ம் ஆண்டில் பிறந்தவர். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார். 

ராதிகா மெர்ச்சன்ட் 1994ம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை வீரேன் மெர்ச்சன்ட், பிரபல மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

ராதிகா மெர்ச்சன்ட் தி கதீட்ரல், ஜான் கானான் பள்ளி,மும்பை எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளிகளில் பயின்றவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் 2017ல் பட்டம் பெற்றார்.

தற்போது, அவர் என்கோர் ஹெல்த்கேரில் இயக்குநர் பதவி வகிக்கிறார்.

Read in English: Shah Rukh Khan dances with Nita Ambani, Rajnikanth shakes a leg with the groom at India’s grandest wedding

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mukesh Ambani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment