New Update
/indian-express-tamil/media/media_files/IZTOlqzzpzZcEtnx1BUm.jpg)
Anant ambani Radhika Merchant
Anant ambani Radhika Merchant
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில், அம்பானி குடும்பம் அணிந்திருந்த ஈர்க்கக்கூடிய ஃபேஷன் ஜூவல்லரி கலெக்ஷன் அனைவரின் கண்களையும் கவர்ந்தது.
அம்பானி குடும்பம் வலுவான குடும்ப உறவுக்காக அறியப்படுகிறது.
அனந்த் அம்பானி தனது திருமணத்தில், அவரது தாயார் நீதா அம்பானியின் குறிப்பிடத்தக்க நகைகளை அணியத் தேர்ந்தெடுத்தது இதற்கு ஒரு உதாரணம்.
அனந்த், முதலில் முகலாயப் பேரரசர் ஷாஜகானுக்குச் சொந்தமான பாசுபண்ட் அணிந்திருந்தார். ஆன்டிக் ஸ்பைனல், ரூபி மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட இந்த ஸ்டன்னிங் பீஸ் மதிப்பு, ரூ. 200 கோடி.
மே 2024 இல், நிதா அம்பானி மும்பையில் நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார், அங்கு அவர் தனது தொண்டு முயற்சிகளுக்காக 'பியூட்டி வித் பர்பஸ் ஹ்யூமனிடேரியன் விருதுடன் கவுரவிக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில், நிதா சிக்கலான தங்கம், ஜரி டிசைன்களுடன் கூடிய கருப்பு பனாரசி புடவையை அணிந்திருந்தார்.
ஆனால் நிதா பாசுபாண்டாக அணிந்திருந்த கல்கி தான் அவருடைய முழு தோற்றத்தையும் உயர்த்தியது.
பாரம்பரியமாக, கல்கி என்பது டர்பன் உடன் இணைக்கப்பட்ட தலைப்பாகை, இது அதன் அரச தோற்றத்தை மேம்படுத்துகிறது.
இந்த நகை, முகலாய சாம்ராஜ்யத்தில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆனந்த் அணிந்திருந்த கல்கி குறிப்பிடத்தக்கது. Topophilia இன்ஸ்டாகிராம் பக்கத்தின் படி, இது 13.7 செமீ உயரமும் 19.8 செமீ அகலமும் கொண்டது மற்றும் ரூபி, ஸ்பைனல் மற்றும் வைரங்கள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முகலாயப் பேரரசின் இந்த ஆடம்பரமான தலை அலங்காரம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்டி மகாராஜாஸில் ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.