Anbe Vaa Bhoomika Delna Davis Personal Diary Tamil News : சீரியல்களின் கதைகளுக்குத்தான் பஞ்சம் என்று பார்த்தால், பெயர்களுக்கும் பஞ்சம்தான் போல. அதனால்தான் என்னவோ சூப்பர்ஹிட் திரைப்படங்களின் பெயர்களை வைத்து ஈர்க்க முயற்சி செய்கின்றனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான அன்பே வா படத்தின் பெயரை வைத்து, காதல் கதையைப் பொழிந்து வருகிறது சரிகம தயாரிப்பு நிறுவனம்.
Advertisment
இந்தத் தொடரின் கதாநாயகியான டெல்னா டேவிஸ், தான் எப்படி அன்பே வா தொடரில் இணைந்தார் மற்றும் அவருடைய தனிப்பட்ட சில குணாதிசியங்களை பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். "நான் கிளாசிக்கல் டான்சர். என்னுடைய பெர்ஃபாமன்ஸ் பார்த்து, போட்டோஷூட் வாய்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன்.
பிறகு படிக்கவேண்டும் என்று முடிவு செய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை முடிக்கும் வேளையில் கொரோனா லாக்டவுன். என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை பண்ணுவோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வந்தன. அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன். இப்படிதான் அன்பே வா சீரியலில் நான் நுழைந்தேன்.
அந்த தொடரில் வரும் பூமிகாவிற்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உண்டு. நான் ஷார்ட் டெம்ப்பர். உடனே உடனே கோவம் வரும். அதேபோல சின்ன விஷயம் என்றாலும் நிறைய யோசிப்பேன். ஏதேதோ நினைத்துக்கொள்வேன். அது எனக்கும் நல்லதல்ல, என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல. இதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அன்பு பாசம் அக்கறை எல்லாம் அளவுக்கு அதிகமாய் கொடுப்பேன்" என்று நிறைவு செய்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil