Anbe Vaa Delna Davis Skincare and Beauty Tips Tamil News : சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில், பூமிகா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருப்பவர் டெல்னா டேவிஸ். நடனக் கலைஞர், மாடல் என் பன்முகக்கலைஞரான இவர், சமீபத்தில் தன்னுடைய எளிமையான சரும பராமரிப்பு டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார். வெட் டிஷ்யூ உபயோகிக்கக்கூடாது என்பது முதல் கண்களைப் பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய் வரை ஏராளமான புதிய குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நான் அழகு மற்றும் சரும பாதுகாப்பிற்காக பார்லருக்கு போறதைவிட சரும பாதுகாப்பு நிபுணரிடம்தான் அதிகம் போவேன். அழகுக்காக இப்போது நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அறியாமல் இருக்கிறோம். அதனால், இந்த விஷயத்தில் நம் சருமத்தைப் பற்றி நன்கு தெரிந்த நிபுணர்தான் என்னுடைய தேர்வு.
அந்த வகையில் என்னுடைய சரும பாதுகாப்பு நிபுணர் எனக்கு கூறிய சில விஷயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். அதிகப்படியான ஒளியிலிருந்து நம் சருமத்தில் ஏற்படுகிற டேமேஜை கட்டுப்படுத்த, நிச்சயம் சன்ஸ்க்ரீன் அவசியம். எப்போது மேக்-அப் போட்டாலும், நிச்சயம் சன்ஸ்க்ரீன் இல்லாமல் போடவே கூடாது. என்றைக்குமே நம்முடைய சருமம் நேரடியாக எந்த ஒளி மீதும் படக்கூடாது. இதில் கவனமாக இருப்பது அவசியம்.

அதேபோல மேக்-அப் அகற்றும் போது, நல்ல ரிமூவர் வாங்கிக்கொள்ளுங்கள். கண்களில் இருக்கும் மேக்-அப்பை சுத்தம் செய்யும்போது, தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதுதான் சிறந்தது. மற்ற பொருள்கள் பயன்படுத்தினால், சற்று அழுத்தம் கொடுக்க நேரிடும். அது கண் இமைகளை டேமேஜ் செய்யும். அதனால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

ரியாக மேக்-அப் எடுக்கவில்லை என்றாலோ, அதிகப்படியான மாசு, சூடு, உணவு, மாதவிடாய் உள்ளிட்ட பல காரணங்களால் முகத்தில் பருக்கள் தோன்றும். ஒரு பரு வந்துவிட்டாலும், கேமராமேன் கூட ‘என்னமா பரு இருக்கு’ என்று கேட்பார்கள். அதனாலேயே முடிந்த அளவு பருக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதனால், உணவுகளில் அதிக கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்கிறேன்.

அசைவம், எண்ணெய் பதார்த்தங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்னால் சாப்பிட முடியாதே. நிச்சயம் அவை பருக்களை உண்டாக்கும். அதனால், இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து வருகிறேன். என்றாலும் சிலநேரங்களில் பருக்கள் தவிர்க்க முடியாதது. இதனை சரிசெய்ய, ஐஸ் கட்டிகளை அங்கு வைக்கலாம். இல்லையென்றால், தேன், கற்றாழை போன்ற இயற்கைப் பொருள்களை அப்ளை செய்தும் இதுபோன்ற டேமேஜிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வெட் டிஷ்யூக்களை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக சாதாரண காட்டன் உபயோகிக்கலாம்.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil