கூந்தல் நீளமாக வளர இதை மட்டும் பயன்படுத்துங்கள் - அன்பே வா டெல்னா டேவிஸ் பியூட்டி சீக்ரெட்ஸ்!
Anbe Vaa Delna Davis Skincare Beauty Secrets Tamil தினமும் 2 பாதம், முந்திரி, வைட்டமின் C நிறைந்த பழங்கள், காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி, சிக்கன் அல்லது பனீர் போன்றவற்றை சாப்பிடுவேன்.
Anbe Vaa Delna Davis Skincare Beauty Secrets Tamil
Anbe Vaa Delna Davis Skincare Beauty Secrets Tamil : அன்பே வா தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் டெல்னா டேவிஸ். கேரளாவுழுந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர், சமீபத்தில் தான் பின்பற்றும் ஏராளமான ஸ்கின்கேர் மற்றும் டயட் டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார். பயணத்தின்போது எப்படி தன்னுடைய சருமத்தைப் பாதுகாத்துக்கொள்கிறார், சென்சிடிவ் சருமத்திற்கான சூப்பர் டிப்ஸ் உள்ளிட்டவற்றை இனி பார்க்கலாம்.
Advertisment
"எந்த விதமான சரும பிரச்சனைக்கும், தலைமுடி பிரச்சனைக்கும் இயற்கையான தீர்வு, கற்றாழை. நான் அதைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவேன். டரியர், ஹேர் கலரிங் என ஏராளமான விஷயங்கள் செய்து தலைமுடியை டார்ச்சர் செய்கிறேன். இவற்றுக்கு பெஸ்ட் சொல்யூஷன் கற்றாழைதான். சருமம், தலைமுடி என எல்லா இடங்களிலும் அப்லை செய்து, மெதுவாக மசாஜ் செய்து குளித்தால் அவ்வளவு நல்லது. சருமம் மற்றும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேக் அப் போடப்போறீங்க என்றால் நிச்சயம் சன் ஸ்க்ரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது. சிலருக்கு சருமம் எளிதில் டேன் ஆகும். எனக்குக் கொஞ்சம் வெய்யிலில் சென்றாலே சருமம் அவ்வளவு டேன் ஆகிவிடும். அதனால், நான் தவறாமல் இந்த இரண்டையும் பயன்படுத்துவேன். நிச்சயம் சன் ஸ்க்ரீன் எல்லோருமே பயன்படுத்தலாம்.
சென்சிடிவ் ஸ்கின் உடையவர்கள் கண்டிப்பாக எண்ணெய் பேஸ்டு பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் ஜெல் பேஸ்டு பொருள்களை பயன்படுத்தலாம். பருக்கள் இருந்தால், ஐஸ் கட்டிகளைத் துணியில் கட்டி வைத்தால் போதும். அதேபோல அவர்கள் கண்டதையும் சாப்பிடக்கூடாது. ஆரோக்கிய சருமத்திற்குத் தண்ணீர் நிறையக் குடிப்பதும் அவசியம்.
மேக் அப் ரிமூவ் பண்ணும்போது மேல் நோக்கி சுத்தம் செய்வது நல்லது. இல்லையென்றால் சரும சுருக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல, வெட் டிஷ்யூ உபயோகிப்பதைவிட காட்டனில் தேங்காய் எண்ணெய் நனைத்து ரிமூவ் பண்ணலாம். இதைவிட சிறந்த ரிமூவர் எதுவுமில்லை. உணவு வகைகளைப் பொறுத்தவரை, தினமும் 2 பாதம், முந்திரி, வைட்டமின் C நிறைந்த பழங்கள், காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி, சிக்கன் அல்லது பனீர் போன்றவற்றை சாப்பிடுவேன். உடல் எடை சரியானதாக வைத்துக்கொள்ள தினமும் அரை மணி நேரம் நடனம் ஆடுவதுண்டு" என்று நிறைவு செய்கிறார் டெல்னா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil