/tamil-ie/media/media_files/uploads/2019/12/a578.jpg)
anchor, actor and big screen hero rio raj family - அப்பா டிரைவர்; அம்மா டெய்லர் - மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து ஹீரோவாகி சாதித்த ரியோ!
ரியோ என்றால் இல்லத்தரசிகளுக்கு நினைவுக்கு வருவது 'ஓ... அந்த சரவணன் மீனாட்சி பையனா' என்பதே...
விஜே, சரவணன் மீனாட்சி சீசனின் மோஸ்ட் வெல்கம்ட் ஹீரோ, காதல் கணவன், பிக் ஸ்க்ரீன் ஹீரோ என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி முன்னேறி இருப்பவர் ரியோ ராஜ்.
ஜஸ்ட் அப்படியே வந்துட்டேன் என்பது போல் அல்ல இவரது வளர்ச்சி..
ரியோவின் அப்பா டிரைவர். அம்மா டெய்லர். குடும்ப சூழலால் அவரது தம்பியும் அம்மாகூடவே வேலைக்குப் போக, அப்போது குடும்பத்தில் பணத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து அவரே அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், "நான் சீக்கிரமே சம்பாதிக்க ஆரம்பிச்சு எல்லாரையும் நல்ல நிலைக்குக் கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன்; வேலை தேடி அலைஞ்சேன். அப்பதான் விஜய் டி.வி-யில் 'புதிய முகம்'னு ஒரு ஷோ பண்ணாங்க.
புதுசா நடிக்க வர்றவங்களை மீடியாவுக்கு அறிமுகப்படுத்துறது தான் அந்த ஷோ. நான் அதுல டைட் டில் வின்னர். அதுக்கப்புறம்தான் சன் டி.வி-யில் விஜே வாய்ப்பு வந்துச்சு" என்கிறார்.
ஆனால், அதன்பிறகு ரியோ வாழ்க்கையில் வசந்தம் தான். அதுவும் காதல் மனைவி ஸ்ருதி அவர் வாழ்க்கையில் வந்த பிறகு டபுள் பூஸ்ட் என்பது போல் முன்னேறத் தொடங்கினார் என்றால் அது மிகையல்ல.
இன்னமும் தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்காக விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த ஜூனியர் சிவகார்த்திகேயன்!.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.