Anchor Nakshathra Skincare Tips Tamil News : தொகுப்பாளினி, நடிகை என பிசியாக சுழன்றுகொண்டிருந்த நக்ஷ்த்ரா, சமீபத்தில் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். திரையில் மட்டுமல்ல நேரிலும் எந்தவிதம் குறைபாடுமில்லாத சருமம் இவருக்கு. எப்படிதான் இந்த அளவிற்கு ஒரேபோன்ற சருமம் இவருக்கு இருக்கிறதோ என்கிற டவுட் எழாமலில்லை. மேக் அப்பிற்கு தனியாகவும் அது அகற்றிய பிறகு தனியாகவும் என ஏராளமான பொருள்களைப் பட்டியலிடுகிறார் நக்ஷத்ரா. அவை என்ன என்பதைப் பார்ப்போமா!

“சருமத்தைப் பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. என்னதான் மேக் அப் போட்டு கருவளையம், பருக்கள் மற்றும் மற்ற வடுக்கள் எல்லாவற்றையும் மறைத்தாலும், சருமம் சீராக இல்லை என்றால், மேக் அப் கூட ஒர்க் ஆகாது. அதனால், சருமத்தைப் பராமரிப்பது மிக மிக முக்கியம்” என்கிற குறிப்போடு தொடங்கும் நக்ஷத்ராவின் பளபளக்கும் சருமத்திற்கு முதன்மை காரணம் இளநீர்தான். தினமும் ஒரு இளநீர் மற்றும் ஏராளமான தண்ணீர் உட்கொள்வது இவருடைய வழக்கம்.

தொடர்ந்து பல சீக்ரெட்டுகளையும் அடுக்குகிறார். “மேக் அப் போடுவதற்கு 6 பொருள்களைப் பயன்படுத்துவேன். ஆனால், மேக் அப் அகற்றிய பிறகு சுமார் 10 பொருள்களைப் பயன்படுத்துவேன். நாம் தீட்டும் மேக்-அப் எந்த வகையிலும் சருமத்தை பாதிக்கக்கூடாது என்பதற்குத்தான் இந்த அலெர்ட். முதலில் மேக் அப் அகற்ற ஆல்கஹால் கலக்காத க்ளென்சர் பயன்படுத்துவேன். அதிலும் முதலில் எண்ணெய் கொண்ட க்ளென்சர் பயன்படுத்திய பிறகு தண்ணீர் கொண்ட க்ளென்சர் பயன்படுத்துவேன். அடுத்தபடியாக சோப் அதிகமில்லாத ஃபேஸ் வாஷ். அதனைத் தொடர்ந்து டோனர். பிறகு இரண்டு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவேன். அடுத்தது சன் ஸ்க்ரீன் அல்லது நைட் க்ரீம், ஐ க்ரீம் மற்றும் லிப் பாம் பயன்படுத்துவேன்.

சருமத்தைப் பாதுகாப்பது என்பது மேஜிக்குமில்லை ஜோக்குமில்லை. எந்த அளவிற்கு சருமத்தை பராமரிக்கக் கடின உழைப்பைப் போடுகிறோமோ அந்த அளவிற்கு சருமம் நன்றாக இருக்கும்” என்று நிறைவு செய்கிறார் நக்ஷத்ரா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“