போட்டோஷூட், ஹேர் கலரிங், சமையல்.. – கலகலப்பான தொகுப்பாளினி நக்ஷத்ரா யூடியூப் சேனல்

Anchor Actress Nakshatra Nagesh Youtube Channel நகைச்சுவை கலந்த கன்டென்ட்டுகளை போட்டால், விரைவில் மில்லியன் வியூஸ்களும் பெறுவார்

Anchor Actress Nakshatra Nagesh Youtube Channel Review
Anchor Actress Nakshatra Nagesh Youtube Channel Review

Anchor Actress Nakshatra Nagesh Youtube Channel Review : தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் நக்ஷத்ரா கில்லாடி. அதிலும்,  உச்சரிப்பிற்க்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதை விடவும் அவருடைய ஸ்மார்ட் லுக், நிச்சயம் அனைவரையும் ஒரு நிமிடம் அவரை திரும்பிப் பார்க்கவேச் செய்யும். அந்த அளவிற்கு எல்லாவற்றிலும் தன்னை ப்ரசென்டெபிளாக வைத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துபவர் நக்ஷத்ரா.

சென்ற வருட லாக்டவுனை எப்படி வீட்டிலிருந்தபடி உபயோகிப்பது என்று எண்ணியவர், தன் பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் முதல் வீடியோவே ஃபேப்ரிக் மாஸ்க் செய்வது எப்படி என்பதுதான்.  அதனைத் தொடர்ந்து கொரோனா காலகட்டத்திற்கு ஏற்றபடி ஹேண்ட்வாஷ், எளிமையான ரெசிபிஸ் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்திருந்தார்.

இவருடைய வித்தியாசமான அதே நேரத்தில் கலகலப்பான ஹேர்கலரிங் Vlog ஓர் லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் விமானம் மூலம் திருச்சி சென்று வந்த நக்ஷத்ராவும் அவருடைய அம்மாவும், அவர்களுடைய பயணத்தை முழுவதும் பதிவு செய்து அப்லோட் செய்திருக்கிறார். அந்தக் காணொளியும் பலராலும் அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது.

பிறகு, மேக்-அப் மற்றும் சரும பராமரிப்பு குறிப்புகளை பதிவேற்றம் செய்தார். சமீபத்தில் திருமணமான இவர், ப்ரீ-வெட்டிங், வெட்டிங், போஸ்ட் வெட்டிங், மெஹெந்தி என கலகலப்பான போட்டோஷூட் காணொளிகள் பலவற்றை அப்லோட் செய்தார். இது லட்சக்கணக்கான வியூஸ்களை அள்ளியது. 1.5 லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ்களை கொண்டிருக்கும் இவருடைய சேனலில், இன்னும் நகைச்சுவை கலந்த கன்டென்ட்டுகளை போட்டால், விரைவில் மில்லியன் வியூஸ்களும் பெறுவார் என எதிர்பார்க்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anchor actress nakshatra nagesh youtube channel review

Next Story
லெமன், பூண்டு, வெந்தயம்… இம்யூனிட்டி நிச்சயம்; தினமும் 2 முறை இப்படி செஞ்சு குடிங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com