Anchor Archana Latest Youtube Viral Video Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அர்ச்சனா பதிவேற்றிய காணொளிகள் அனைத்தும் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றன. அதில், பாத்ரூம் டூர் வீடியோ சர்ச்சை யாராலும் மறந்திருக்க முடியாது. அதனைத் தொடர்ந்து தன்னுடைய சேனலில் ஏராளமான Vlog வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில், தன்னுடைய வீட்டின் கிச்சன் டூர் முடிந்ததனால், இப்போது தன் தங்கை வீட்டின் கிச்சன் டூரை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார் அர்ச்சனா.
தன்னுடைய கிச்சன் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது, எப்படி அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார், அதற்கான காரணம் என்ன என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம் என்றபடி தன் சமையலறைக்கு அழைத்துச் சென்றார் அர்ச்சனாவின் தங்கை அனிதா. நீல நிறத்தில் பார்ப்பதற்கே மிகவும் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருந்தது அனிதாவின் கிச்சன். ஏராளமான பொருள்கள் இந்த கிச்சனில் இருந்தாலும், அவையெல்லாம் எப்போது கடைசியாக பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறி என அர்ச்சனா கலாய்க்க, அதெல்லாம் உண்மைதான் என்கிற பாணியில் அனிதாவும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சில கிச்சன் ரூல்ஸ் இருக்கிறதாம், அந்த வரிசையில் அனிதாவின் கிச்சன் ரூல்ஸ் என்னவென்றால், எப்போது என்ன சமைத்தாலும் அதைக் குறை சொல்லாமல் சாப்பிடவேண்டும் என்பதுதானாம். நல்ல ரூல்ஸ். அதனைத் தனியாகவே ஒரு ஓரத்தில் அச்சடித்து சுவரில் மாட்டியும் இருக்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் இருக்கும் காலண்டர் கூட பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் பாசிட்டிவ் வைப் கொடுப்பது போலவும் இருந்தது. பிறகு, ஏகப்பட்ட ஃ பிரிட்ஜ் மேக்னட்ஸ் ஒட்டப்பட்ட அவர்களின் கியூட் ஃபிரிட்ஜை காட்டினார்.
பிறகு, கிச்சனில் ‘KITCHEN’ என ஆங்கில எழுத்துகள் பதித்த மேட் போடப்பட்டிருந்தது. அதற்கான காரணத்தை அனிதாவின் கணவர் அர்ஜுனிடம் கேட்டார் அர்ச்சனா. அதற்கு, காலையில் எழுந்ததும் இந்த அறைக்கு வரும்போது கிச்சனுக்குதான் வந்திருக்கிறோம் என்று உறுதி படுத்த இந்த முடிவு என்று மக்கள் அனைவரும் அசந்துபோகிற அளவிற்கு ஒரு பதிலைக் கூறினார் அர்ஜுன்.
பிறகு, குழந்தைக்கு சமைப்பதற்கு என பிரத்தியேகமான சாதனங்களைப் பற்றி அர்ஜுன் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, கிச்சனில் இருக்கும் ஜூஸ் எசன்ஸ், மாவுப் பொருள்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருள்களைப் பற்றி அனிதா கூறினார். சுத்தமான கரண்டி, கிண்ணங்கள், தட்டுகள் ஆகியவற்றை மிகவும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக கிச்சனை சுத்தம் செய்யப் பழைய துணியைப் பயன்படுத்தாமல் புதிய துணியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள் என்கிற குறிப்போடு இந்த காணொளியை நிறைவு செய்தார் அர்ச்சனா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil