'ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்' - அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்!
Anchor Bigg Boss Archana and Zara Beauty Tips அப்படி சுத்தமான ரோஸ் நீர் கிடைத்தால், அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
Anchor Bigg Boss Archana and Zara Beauty Tips அப்படி சுத்தமான ரோஸ் நீர் கிடைத்தால், அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
Anchor Bigg Boss Archana and Zara Beauty Tips Skincare Secrets Tamil
'காமெடி டைம்' அர்ச்சனா என்றால் 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட். சமீப காலமாக விதவிதமான சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இவர், தன் குடும்பத்தினர் மீது வைத்துள்ள பாசப்பிணைப்பை அவ்வப்போது காணொளிகள் மூலம் பார்ப்பதுண்டு. அந்த வரிசையில், தன் பதின்பருவ மகளான ஜாராவை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்கிற வீடியோவை அப்லோட் செய்திருந்தார் அர்ச்சனா. மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அந்த காணொளியில் டீனேஜ் மகள்களுக்கான சரும பாதுகாப்பு டிப்ஸ்களை வழங்கியிருக்கிறார்.
Advertisment
"பதின்பருவ பெண்களின் சருமம் ஓரளவிற்கு மிருதுவாக இருக்கும் என்பதால், சாஃப்ட் ட்ரீட்மென்ட்டுகள் போதும் என்கிறார் அர்ச்சனா. அந்த வரிசையில் சிறிதளவு பாலேடு, சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் கத்தாழை ஆகியவற்றை எடுத்து, அதனை நன்கு கலந்து முகத்தில் அப்லை செய்து நன்கு ஸ்க்ரப் செய்யவேண்டும். அழுத்தி ஸ்க்ரப் செய்யவேண்டாம். முகத்தில் தேய்த்த பிறகு மூன்று நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
Advertisment
Advertisements
பிறகு ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்துத் துடைத்துக்கொள்ளலாம். அடுத்தபடியாக முகத்தில் ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே செய்யவேண்டும். சுத்தமான ரோஸ் வாட்டர் இப்பொழுதெல்லாம் கிடைப்பது அரிது. அப்படி சுத்தமான ரோஸ் நீர் கிடைத்தால், அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது சருமத்தை மிருதுவாக்கும்.
&t=66s
அடுத்தது ஃபேஸ் பேக். இதற்கு சிறிதளவு கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், கற்றாழை மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் அப்லை செய்யவேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு, முகத்தைக் கழுவவேண்டும். அவ்வளவுதான். நிச்சயம் இப்போது உங்கள் குழந்தையின் சருமம் மிருதுவானதாக இருக்கும். இதனை அனைவரும் உங்கள் பதின்பருவ மகளுக்கு நிச்சயம் இது ஒர்க் ஆகும்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil