scorecardresearch

வாழ்நாளின் முதல் பிறந்தநாள் பார்ட்டி : கருப்பு உடையில் மிளிரும் டிடி!

Anchor DD Birthday Party இதுவே முதல் முறை என்று பதிவிட்டிருக்கும் போஸ்ட்டிற்கு ஏகப்பட்ட ஹார்ட்டின்கள் பறக்கின்றன.

Anchor DD Dhivya Dharshini Birthday Party Pictures Tamil News
Anchor DD Birthday Party Pictures

DD Birthday Party Tamil News : இதுவரை தன் வாழ்நாளில் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடியதே இல்லை என கூறி தான் கொண்டாடிய முதல் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளினி, பேராசிரியை மாற்று நடிகையுமான திவயதர்ஷினி.

Anchor DD Dhivya Dharshini Birthday Party Pictures Tamil News
Vijay Tv Anchor DD

சின்னத்திரை சீரியல்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பின்னாளில் தமிழில் அதிக ஊதியம் பெறும் தொகுப்பாளராக மாறினார். ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்திருக்கும் இவர் இப்போதைய பல தொகுப்பாளர்களுக்கு முன்னோடி. கலகலப்பாகப் பேசுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கேற்ற உடைகளை அணிந்து தனக்கென்று தனி ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை உருவாக்கியவர் டிடி.

டிடி சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை தன் நெருங்கிய நண்பர்களோடு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். இதுவரை தன் வாழ்நாளில் தன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியதில்லை என்றும் இதுவே முதல் முறை என்றும் பதிவிட்டிருக்கும் போஸ்ட்டிற்கு ஏகப்பட்ட ஹார்ட்டின்கள் பறக்கின்றன.

அழகிய சீக்வன்ஸ் வேலைப்பாடுகள் நிறைந்த கருப்பு நிற பாடிகான் உடையணிந்து மிளிரும் டிடி, தன் நண்பர்களோடு இணைந்து எடுத்துக்கொண்ட பல கியூட் மெமென்ட்டுகளை க்ளிக் செய்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்களோடு, “நான் ஒருபோதும் பிறந்தநாள் விருந்து கொண்டாடியதில்லை.. இதுதான் முதல் முறை. என் சில நெருங்கிய நண்பர்கள் இந்த மாலையை மிகச் சிறப்பாக்கிவிட்டனர்…” என்கிற கேப்ஷனையும் இணைத்திருக்கிறார்.

வகை வகையான கேக், ஒளிரும் வண்ண விளக்குகள் என டிடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் லவ்லி ரகம். மேலும், துல்கர் சல்மான், சுருதி ஹாசன், பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Anchor dd dhivya dharshini birthday party pictures tamil news