/indian-express-tamil/media/media_files/2025/09/08/vj-vishal-sundar-2025-09-08-12-26-08.jpg)
90-களில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நாம் இருந்தாலும், நம்மை ஒரு கணம் நிறுத்தி, அன்றைய நாளுக்கான நம்பிக்கையை விதைத்த குரல் ஒன்று நம் நினைவில் இன்றும் இருக்கிறது. அது, சன் டிவியில் தினமும் காலையில் ராசி பலன் வாசித்த விஜே விஷால் சுந்தர். அவர் வெறும் ராசி பலன் வாசிப்பவர் மட்டுமல்ல. ஒவ்வொரு ராசிக்கான 'ராசியான நிறம்' மற்றும் 'அனுகூலமான திசை' என அனைத்து தகவல்களையும் துல்லியமாக வழங்குவார்.
ராசி பலன் என்பது ஒரு நம்பிக்கை என்றாலும், அதை அவர் வாசித்த விதம் ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது. சூரிய உதயத்தின் ஒளியில், நம் அனைவருக்கும் ஒரு புன்னகையையும், அன்றைய நாளுக்கான நம்பிக்கையையும் விதைத்த அந்த குரல், ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தது. இப்படி நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் திசைகளைச் சொன்ன அதே விஜே விஷால் சுந்தர், சமீபத்தில் வாவ் தமிழாவுக்கு அளித்த பேட்டியில் தனது புடவை கலெக்ஷன்ஸ் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
ஒருமுறை அவர் ரூ. 7,500 மதிப்புள்ள ஒரு பளபளப்பான கோல்டு டிஷ்யூ மெட்டீரியல் புடவையை வாங்கியுள்ளார். அந்தப் புடவைக்கு ஏற்ற பிளவுஸை தைப்பதற்கான செலவு, அவரை வியப்படையச் செய்தது. "பிளவுஸ் தச்ச விலைக்கு இன்னொரு சேலை வாங்கலாம், அவ்ளோ காஸ்ட்லி" என்று அவர் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். இந்த அனுபவத்திலிருந்து, ஒரு விலை உயர்ந்த உடையை வாங்கும் முன் அதன் பிளவுஸ் செலவையும், அதன் பயன்பாட்டையும் பற்றி யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த விலையுயர்ந்த புடவையை ஒருமுறை மட்டுமே அணிந்ததாகவும், அதன் தோற்றம் எல்லோருடைய நினைவிலும் பதிந்துவிட்டதால், மீண்டும் வேறு நிகழ்ச்சிக்கு அதை அணிய முடியவில்லை என்றும் கூறினார். மேலும், அவரது நிச்சயதார்த்தத்திற்காக, அவரது கணவர் ரூ. 25,000 மதிப்புள்ள சிவப்பு நிற புடவையை வாங்கித் தந்ததாகவும் பகிர்ந்து கொண்டார். ஒரு காலத்தில் ராசி பலன் மூலம் நம் அனைவருக்கும் நம்பிக்கை விதையை விதைத்த விஜே விஷால் சுந்தர், இன்று ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.