ஆந்திரா முருக்கு இப்படி செய்யுங்க. ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் தண்ணீர்
கால் ஸ்பூன் மிளகாய் பொடி
2 சீடிகை பெருங்காயம்
2 ஸ்பூன் வெள்ளை எள்ளு
1 கப் பச்சரிசி
1 ஸ்பூன் பட்டர்
1 ஸ்பூன் பொட்டுக்கடலை
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்கவும். அதில் மிளகாய் பொடி சிறிய அளவு சேர்த்து கொள்ளவும். உப்பு, பெருங்காயம், வெள்ளை எள்ளு சேர்க்கவும். தொடர்ந்து பச்சரிசி மாவை சேர்க்கவும் தொடர்ந்து கிளரவும். மாவு திரண்டு வரும். இதை எடுத்து வைத்துகொள்ளவும், பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும். தொடர்ந்து பிசைந்து கொள்ளவும். நீளமாக மாவை செய்யவும். வட்டமாக ஆந்திரா முருக்கு போல் செய்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“