இப்படி ஒரு முறை இப்படி தோசை செய்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
வத்தல் 4
8 பல் பூண்டு
2 ஏலக்காய்
உப்பு
கருவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
அரை ஸ்பூன் வெல்லம்
சீரகம் கொஞ்சம்
தோசை மாவு
பட்டர்
செய்முறை : ஒரு மிக்ஸியில் வெங்காயம், வத்தல், பூண்டு, உப்பு, வெல்லம், மஞ்சள் பொடி, கருவேப்பிலை, சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இந்த பேஸ்டை நாம் தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தோசை மாவை வைத்து பெரிதாக தோசை போட்டு, இந்த பேஸ்டை மேலாக பரப்பவும். தொடர்ந்து அதற்கு மேலாக பட்டர் வைத்து உருகியதும், தோசை சுட்டு எடுக்கவும். சூப்பர் ஸ்பெஷல் ஆந்திரா தோசை ரெடி.