சுவையான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எள்ளு- 3 ஸ்பூன்
வேர்க் கடலை- 1 கப்
கடலை எண்ணெய்- தேவையான அளவு
சின்னவெங்காயம்- 10
பச்சை மிளகாய்-10
புளி- தேவையான அளவு
பூண்டு- 4
தக்காளி- 1
தேங்காய்- 1 கப்
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் அதில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளககாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது கலவையை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். பின்னர் மிக்சி ஜார் எடுத்து அதில் இந்த கலவையை போட்டு தேவையான அளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கார சட்னி ரெடி. அடுத்து கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொட்டலாம். அவ்வளவு தான் இட்லி, தோசைக்கு அசத்தல் கார சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“