andra red chutney andra chutney recipes tamil:ஆந்திரா ரெட் சட்னி என்றால் தெரியாதவர்களே இல்லை. இட்லி, தோசை, ஆப்பம் என அவர்களின் டிபன் டிஷ் எல்லாவற்றிலும் இந்த ரெட் சட்னி கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
Advertisment
காரசாரம் தானா ஆந்திரா ஸ்பெஷல். ஹோட்டல் ஸ்டைல், கிராம ஸ்டைல் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. நீங்களும் செய்து பாருங்கள் மிஸ் பண்ணாம.ஒருமுறை செய்தால் போது டேஸ்ட் உங்க நாவில் ஒட்டி கொள்ளும். மிகவும் எளிமையான செய்முறை தான். எளிமையாக செய்து விடலாம். 10 நிமிடங்கள் போதும்.
வரமிளகாய் – 10
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
பூண்டு – 10 பற்கள்
புளி – சிறிது
கடுகு – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் வரமிளகாய் , பூண்டு , கறிவேப்பிலை , புளி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் காரமான மிளகாய் சட்னி தயார் !!!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”