/indian-express-tamil/media/media_files/Yy0wcZBtF2zm8lZz1i00.jpg)
Anemia symptoms, causes and treatment
ஆண்கள், பெண்கள் முதல் குழந்தைகள், முதியவர்கள் வரை ரத்த சோகை நோய் இன்று எல்லாருக்கும் பொதுவானதாகி விட்டது.
ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலகம் முழுவதுமே ஆண்களை விடவும் பெண்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம்.
மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது.
ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறைப் பிரசவம், மகப்பேறின்போது அதீத ரத்தப் போக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்தல், குழந்தையின் எடை குறைதல், மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல், பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலக் கோளாறுகள் உண்டாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.
இரும்புச் சத்து பற்றாக்குறையால் பெரும்பாலும் ரத்த சோகை உண்டாகிறது. ஃபோலேட் (விட்டமின் - பி9), விட்டமின் - பி12, விட்டமின் - ஏ குறைபாடு ஆகியவையும் ரத்த சோகை உண்டாக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.
ரத்தசோகை பாதிப்பை நாம் உணவிலேயே சரிசெய்ய முடியும்.
இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன? அந்த உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை எப்படி நம் உடலில் உறிஞ்ச வைக்க முடியும் என்பது குறித்து டாக்டர் சிவகுமார் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.