மனசுல இருக்கிறதை அப்படியே பேசாதீங்க: கோபத்தை காண்பிக்க இந்த வழி யூஸ் பண்ணுங்க- சைக்காலஜிஸ்ட் ஜிதேந்திரா
ஒரு விலங்குக்குத்தான் தன்னுடைய மனசுல இருக்கிறதை, அதன் விளைவுகளைப் பத்தி யோசிக்காம அப்படியே வெளிப்படுத்திக்க முடியும். ஏன்னா, அதுக்கு அந்த அறிவு கிடையாது.
ஒரு விலங்குக்குத்தான் தன்னுடைய மனசுல இருக்கிறதை, அதன் விளைவுகளைப் பத்தி யோசிக்காம அப்படியே வெளிப்படுத்திக்க முடியும். ஏன்னா, அதுக்கு அந்த அறிவு கிடையாது.
நம்ம வாழ்க்கையில் சில விஷயங்களை ரொம்ப பெருமையான விஷயங்களா பேசிட்டு இருப்போம். ஆனா நம்ம வாழ்க்கையில நிறைய நேரங்கள்ல பிரச்சனை குடுக்கறதே இந்த பெருமையா பேசிட்டு இருக்கிற விஷயங்களால தான் இருக்கும்.
Advertisment
மனசுல பட்டதை அப்படியே பேசுறது அது பெருமையா?
நிறைய பேர், "நான் மனசுல பட்டதை அப்படியே ஓபனா பேசிடுவேன்" என்று சொல்வதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. ஆனால், இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. மனசுல எந்த பயமும் இல்லாம, எதை வேணும்னாலும் ஓபனா பேசிடுவேன் என்று சொல்லும்போது, அதன் விளைவுகளைத் தாங்க முடியாம நிறைய பேர் மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க.
ஒரு உதாரணத்துக்கு, நம்ம சின்ன வயசுல நம்மளோட நல்லதுக்காக அப்பா, அம்மா பல விஷயங்களைச் சொல்லி இருப்பாங்க. அவங்க சொன்னது எவ்வளவுதான் உண்மையானதா இருந்தாலும், உங்களுக்கு கோபம் வந்திருக்கும். ஏன்னா, அவங்க சொல்ற விஷயம் நல்லதுக்காக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போ நமக்கு இருக்காது. அதே மாதிரிதான், நீங்க மனசுல பட்டதை அப்படியே ஓபனா பேசும்போது, மத்தவங்களும் அதை அப்படிதான் எடுத்துப்பாங்க.
Advertisment
Advertisements
உண்மையைப் பேசறது அவசியம், தைரியமா பேசணும். ஆனால், மனசுல இருக்கிறதை எதையும் யோசிக்காம, அப்படியே வெளியே கொட்டுறது மனிதனின் குணமில்லை. ஒரு விலங்குக்குத்தான் தன்னுடைய மனசுல இருக்கிறதை, அதன் விளைவுகளைப் பத்தி யோசிக்காம அப்படியே வெளிப்படுத்திக்க முடியும். ஏன்னா, அதுக்கு அந்த அறிவு கிடையாது. ஆனா, நம்ம மனிதர்கள். நம்ம சொல்ல வேண்டிய விஷயத்தை, மத்தவங்களை காயப்படுத்தாம, நம்முடைய உறவுகளைப் பாதிக்காம சொல்றதுதான் புத்திசாலித்தனம்.
ஈகோவைத் திருப்தி செய்ய பேசுறோமா?
மனசுல இருக்கிறதை அப்படியே பேசுறதுன்னு சொல்லும்போது, சில நேரங்கள்ல நாம சில விஷயங்களை நம்புறோம். "எதிரில் இருக்கிறவன் தான் தப்பு, நான் கரெக்ட்" என்று ஒருதலைபட்சமா பேசுறது ஒரு காரணம். இன்னொரு முக்கியமான காரணம் என்னன்னா, அந்த இடத்துல நாம காரியத்தைச் சாதிக்கவோ, உண்மையைப் பேசவோ இல்லை. நம்முடைய ஈகோவை வெளிப்படுத்தணும் என்ற எண்ணத்துலதான் நிறைய நேரங்கள்ல இப்படிப் பேசிடுறோம்.
இதுனால உங்களுடைய உறவுகள் மேம்படப் போறது கிடையாது. மாறாக, உறவு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரி பேசுறதுனால உங்களுக்குக் கெட்ட பெயர் வரலாம், சீக்கிரமே பல பேர் உங்களைத் தவிர்க்க ஆரம்பிக்கலாம். இந்த விளைவுகள் எல்லாம் உங்களுக்குச் சம்மதம் என்றால், நீங்க ஓபனா பேசலாம். இல்லைன்னா, நாம Assertive Communication-ஐப் பழகணும்.
Assertive Communication - என்ன செய்யணும்?
Assertive Communication அப்படின்னா என்ன? ரொம்ப எளிமையா சொல்லணும்னா, இரண்டு பேருக்கும் அடி விழாத வகையில, சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாகவும், பக்குவமாகவும் சொல்றதுதான். இதைச் செய்ய சில விஷயங்களைப் பழகணும்.
எம்பதி: மத்தவங்க எந்த இடத்துல இருந்து பேசுறாங்க, அவங்க அப்படி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பதைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யணும். அவங்க மனதைக் காயப்படுத்தாமல், முடிந்த அளவுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லணும்.
யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்: யாராவது தவறாகப் பேசினால், உடனேயே அதைத் திருப்பிப் பேசணும்னு நினைக்காதீங்க. சில நேரம் அமைதியா இருங்க. "நான் அப்புறமா உங்ககிட்ட பேசறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிடுங்கள். உட்கார்ந்து யோசிங்க. யார் பக்கத்துல தவறு இருக்குன்னு யோசித்துப் பார்த்து, அடுத்த முறை அவங்க அமைதியா இருக்கும்போது, Prepared ஆக வந்து பேசுங்க.
இந்த உலகத்துல எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாதுன்னு சொல்ல முடியாது. ஆனா, பல பிரச்சனைகளை நாம இந்த மாதிரி Assertive Communication முறையைப் பயன்படுத்தித் தீர்க்க முடியும். "மனசுல பட்டதை அப்படியே பேசறது" என்ற பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்படிப் பக்குவமாகப் பேசலாம் என்பதைப் பழக ஆரம்பித்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.