கோபக்காரரா நீங்கள்? அதிகப்படியான கோபத்தைக் கட்டுப்படுத்த இதை மட்டும் பின்பற்றுங்கள்!
Anger management tips suggestions advice motivational video Tamil News மேலும் இதில் மோசமான பகுதி என்னவென்றால், வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது என்பதுதான்
Anger management tips suggestions advice motivational video Tamil News : எல்லா உணர்ச்சிகளையும் போலவே, கோபமும் இயற்கையானது மற்றும் உங்கள் வாழ்க்கையில் குறைந்தது சில முறையாவது நீங்கள் உணர வேண்டிய ஒன்று. அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது உங்கள் உறவுகளில் குறிப்பிடத்தக்கப் பிரிவுகளையும் மனக்கசப்புகளையும் தவிர்க்கும்.
Advertisment
நீங்கள் மிகவும் கோபமாக இருக்கும்போது, கவனக்குறைவான வார்த்தைகள் உங்கள் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தலாம். மன்னிப்பு கேட்கப்படலாம் ஆனால், ஒருமுறை சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. உங்கள் கோபத்தை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த இந்த ஊக்கமளிக்கும் வீடியோவைப் பாருங்கள்:
இந்த முரண்பாட்டைக் குறைக்க செயல்படுத்தக்கூடிய முக்கியமான நடத்தை மாற்றங்களை வீடியோ எடுத்துக்காட்டுகிறது. அதில், நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படும் முதல் ஆலோசனை. கவனக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும் உங்களுக்கு நெருக்கமானவர்களைக் காயப்படுத்துவதிலிருந்தும் இந்த எண்ணம் உங்களைத் தடுக்கலாம்.
"முதலில், பேசுவதற்கு முன் யோசியுங்கள். கோபம் உங்களை எதிர்பாராத விஷயங்களைச் செய்ய வைக்கும். கோபத்தின் உச்சத்தில் கடுமையான வார்த்தைகளைச் சொல்வது எளிது. பல சமயங்களில் நாம் கோபமாக இருக்கும்போது, நம் அன்புக்குரியவர்களிடம் பல வார்த்தைகளைச் சொல்வோம், அதன் பிறகு நாம் வருந்துவோம். மேலும் இதில் மோசமான பகுதி என்னவென்றால், வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது என்பதுதான்"
ஒருவேளை நீங்கள் கோபமாகவும் விரக்தியாகவும் இருக்கும்போது அமைதியாக இருப்பது நல்லது என்றும், பின்னர் இந்த விஷயத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் வீடியோ அறிவுறுத்துகிறது. நீங்கள் தெளிவான பார்வையோடு விஷயத்தை அணுகுவது மட்டுமல்லாமல், சிறந்த முடிவுகளையும் எடுப்பீர்கள்.
“நீங்கள் கோபமாகவும் விரக்தியாகவும் இருக்கும்போது அமைதியாக இருப்பது நல்லது. பதற்றமான சூழ்நிலையில் நீங்கள் அமைதியாக இருக்க உதவும் எளிதான தந்திரம் நம்மிடம் உள்ளது. மெதுவாக உங்கள் தலையில், ‘டேக் இட் ஈஸி’ அல்லது ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil