Anil Kapoor credits South-Indian food : திரையில் என்றும் மார்கண்டேயனாக இருப்பவர் தான் பாலிவுட் நடிகர் அனில் கபூர் தான். மனிதனை பார்த்தால் 62 வயதா என்று யாருக்கும் சந்தேகமும் பொறாமையும் தான் வரும். அவ்வளவு இளமையாகவும் துள்ளலாகவும் வலம் வருகிறார் அனில் கபூர். அவர் இளமையின் ரகசியம் குறித்து மனம் திறக்கும் போது என்னுடைய இளமையான தோற்றத்திற்கு முழுமையான காரணம் தென்னிந்திய உணவுகள் தான் காரணம் என்று நினைப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியின் போது “என்னுடைய இளமையின் ரகசியம் என்பது நான் தென்னிந்திய உணவுகள் மீது வைத்திருக்கும் அலாதி பிரியம் தான் காரணம். பல ஆண்டுகளாக ந்நான் அந்த உணவுகளை தான் உட்கொண்டு வருகிறேன். எனக்கு அந்த உணவுகள் மீது அவ்வளவு விருப்பம்” என்றும் கூறினார் அவர்.
மேலும் படிக்க : Diabetic Recipes: சர்க்கரையை மூச்சிரைக்க ஓட வைக்கும் உணவுகள்!
தென்னிந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், சட்னி, தோசை, ஊறுகாய், சாதம், ரசம், மற்றும் தயிர் என அனைத்து விதமான தென்னிந்திய உணவுகளையும் உட்கொள்வேன். இட்லியும் தோசையும் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகவே இருக்கிறது.
யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அதற்கு இட்லி தான் சிறந்த உணவாக இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான உணவும் கூட என்று கூறிய அவர் மேலும் சில முக்கியமான உணவுக் குறிப்புகளை தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
'Traffic' ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி... பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.
மது மற்றும் புகைப்பழக்கம் சுத்தமாக இல்லை. இனிப்பு உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் அனில் கபூர்.
பஞ்சாப் குடும்ப பின்னணியை கொண்டவர் என்பதால் எப்போதும் தன்னுடைய உணவில் பருப்பு, காய்கறிகள், சிக்கன் போன்றவற்றை சேர்த்துக் கொள்வார்
6 நேரம் சிற்றுணவாக உணவை உட்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளார் அவர்
நீங்கள் இளமையாக தெரிய பட்டினி இருக்க வேண்டாம். மாறாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள் என்று டிப்ஸையும் அள்ளி வீசுகிறார் அனில் கபூர். இவர் எவ்வளவு பெரிய ஃபூடி என்பது இவரின் இன்ஸ்டாவை பார்த்தால் நமக்கே தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.