முகத்தில் முடியை நீக்க… பாலுடன் இதை சேர்த்து யூஸ் பண்ணுங்க; அனிதா குப்புசாமி
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கான வீட்டு வைத்திய முறையை அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். ஹார்மோன் கோளாறு காரணமாக பெண்களின் முகத்தில் முடி உருவாவதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கான வீட்டு வைத்திய முறையை அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். ஹார்மோன் கோளாறு காரணமாக பெண்களின் முகத்தில் முடி உருவாவதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் சுமார் 10 வயது இருக்கும் பெண் குழந்தைகளுக்கே உதட்டின் மேல் பகுதி, கன்னங்கள் ஆகிய இடங்களில் முடி வளர்வதாக அனிதா குப்புசாமி கூறுகிறார். குறிப்பாக, ஹார்மோன்கள் கோளாறு காரணமாக இவ்வாறு முகத்தில் முடி வளருவதாக கூறப்படுகிறது.
Advertisment
இது போன்று பெண்கள் முகத்தில் வளரும் தேவையில்லாத முடியை தடுப்பதற்கு தற்போது நிறைய வைத்திய முறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை பின்பற்றும் போது பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற தயக்கம் சிலருக்கு இருக்கும்.
மேலும், இந்த முடிகளை முற்றிலும் அகற்ற ஃபேஸ் க்ரீம் பயன்படுத்தலாமா என்று சிலர் கருதுவார்கள். எனினும், அந்தக் க்ரீம்களில் இருக்கும் இரசாயனங்கள் சில சமயத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அந்த வகையில், முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடிகளை, வீட்டு வைத்திய முறையில் அகற்றலாம் எவ்வாறு என்று அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதற்காக, நம் முகத்திற்கு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பசை பதத்திற்கு மாறி விடும்.
இந்தக் கலவையை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக முகத்தில் நன்றாக தேய்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர், காலை எழுந்ததும் எப்போதும் போல் குளித்து விடலாம். இவ்வாறு 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக செய்தால், முகத்தில் தேவை இல்லாத இடங்களில் இருக்கும் முடி மறைந்து விடும் என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி - Anitha Pushpavanam Kuppusamy - Viha Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.