முடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்!

Anita Sampath Haircare Tips காய்ந்த தலையில் எப்போதுமே ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது.

Anita Sampath Bigg Boss Haircare Tips Tamil News
Anita Sampath Bigg Boss Haircare Tips Tamil News

செய்தி வாசிப்பாளராக இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் அனிதா சம்பத். சமீபத்தில் அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில், தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார். அதனை இங்கே பார்க்கலாம்.

‘சுடுதண்ணீரில் எப்போதுமே தலைக்குக் குளிக்கக்கூடாது. அது நம் தலைமுடி வேரை வலுவிழக்கச் செய்து, முடி உதிர்தலை ஏற்படுத்தும். உடலுக்கு சுடுதண்ணீரில் குளித்தாலும், நிச்சயம் தலை முடியைக் குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

எப்போதுமே ஷாம்பூ பயன்படுத்தும்போது, அதனை அப்படியே தலையில் தேய்க்கக்கூடாது. அரை மக் தண்ணீரிலே சிறிதளவு ஷாம்பூ ஊற்றி, அதனை நன்கு கலந்துவிட்ட பிறகு தேய்த்துக் குளிக்கலாம். இப்படிச் செய்வதனால், அதிகப்படியான கெமிக்கலை மட்டுப்படுத்தும். அதனால், தலைமுடி சேதமடையாமல் இருக்கும்.

வெளியில் செல்லும்போது தலைமுடியை சூரிய ஒளியில் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும். ஹெல்மெட் பயன்படுத்தும்போதும் காட்டன் துணியால் தலையை மறைத்து பிறகு ஹெல்மெட்டை அணியலாம். பெண்கள், துப்பட்டாவால் தலைமுடியை முழுவதுமாக மறைக்கும்படி செய்யலாம்.

காய்ந்த தலையில் எப்போதுமே ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தபிறகு குளிப்பதுதான் சிறந்தது. காய்ந்த தலையிலேயே மீண்டும் தலைக்குக் குளிப்பது, முடியைக் கரடுமுரடாக்கிவிடும். குறைந்தபட்சம் 2 மணிநேரமாவது தலைக்கு எண்ணெய் வைக்கவேண்டும்.

தலைக்குக் குளித்தபிறகு, உடனே தலைமுடியை ஒரு துண்டால் தட்டுவது நிறையப் பேருடைய வழக்கமாக இருக்கிறது. இது மிகவும் தவறான செயல். இது மேலும் தலைமுடியை சேதம் செய்து, முடி உதிர்வை ஏற்படுத்தும். இயற்கையாகத் தலைமுடியைக் காயவைப்பதுதான் சிறந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anita sampath bigg boss haircare tips tamil news

Next Story
90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..priya raman
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com