Anita Sampath Birthday Celebrations Youtube Channel Tamil News
Anita Sampath Birthday Celebrations Youtube Channel Tamil News : அனிதா சம்பத் என்றாலே கன்னுகுட்டி மற்றும் பிரபா என்கிற பெயர்களும் கூடவே நினைவுக்கு வரும். அந்த வகையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தன் கன்னுகுட்டிக்கு, கியூட் சர்ப்ரைஸ்களை கொடுத்து அசத்தியிருக்கிறார் பிரபா.
Advertisment
12 மணி ஆவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பே தூங்கிக்கொண்டிருந்த அனிதாவை எழுப்பி, வாழ்த்துகள் கூறிவிட்டு, அவரை ஃப்ரீயாக விட்டுவிட்டார். அதற்கு காரணம், 12 மணிக்கு மேல் அனிதா பிசியாக விடுவார் என்பதால்தான். எப்படியோ அனிதா பிசியாக, பிரபா அடுத்தநாள் சர்ப்ரைஸ்க்காக தயாராகிக்கொண்டிருந்தார்.
Advertisment
Advertisements
பிறந்தநாளுக்கு வெளியே சென்று பர்ச்சேஸ் செய்ய முடியாது என்பதால், ஏற்கெனவே தன்னிடம் இருந்த உபயோகிக்காத உடையை உடுத்திக்கொண்டு ஐஸ் க்ரீம் சாப்பிடத் தொடங்கினார் பர்த்டே கேர்ள். அனிதாவைக் காண்பதற்காக அவருடைய வீட்டிலிருந்து அம்மா, அண்ணன் , தம்பி, தங்கை, குட்டிச்செல்ல செர்ரி நாய்க்குட்டி ஆகியோர் வருகை தர இருப்பதனால், அனைவருக்காகவும் பிரபா செஃப் அவதாரம் எடுத்தார்.
பிரபா சிக்கன் லாலி பாப் செய்துகொண்டிருக்க, ப்ரெட் ஹல்வா, இறால், பிரியாணி போன்றவற்றை ஆர்டர் செய்துவிட்டனர். பிறகு விருந்தாளிகள் அனைவரும் வர, கேக் இல்லை இல்லை இந்த கேக் கலாச்சாரத்தை ஒழிக்கணும் என்கிற நோக்கத்தோடு, ஐஸ் க்ரீம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடினர். அனைவர்க்கும் அனிதா ஊட்டிவிட்ட பிறகு, தன்னுடைய கன்னுகுட்டிக்காக வாங்கி வைத்திருந்த புதிய ஐபோன் தொலைபேசியை பரிசளித்தார் பிரபா.
'எப்போ பார்த்தாலும் மாத்தி மாத்தி ஸ்மார்ட்போன்களைத்தான் பரிசளித்துக்கொள்கிறோம்' என்கிற குறிப்போடு,ஐபோனின் அம்சங்களைப் பற்றி டிஸ்கஸ் செய்தனர். பிறந்தநாள் அன்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சிக்குச் செல்ல தயாராக இருந்தார் அனிதா. ஒரு வழியாகப் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும், சித்தி வீடு, அம்மா வீடு என தன் உறவினர்களின் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டார் கன்னுகுட்டி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil