Anita Sampath Hairfall Care Tips Tamil : பருவங்கள் மாறமாற நம் உடலிலும் மாற்றங்கள் நிகழும். அதனால் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சனை, தலைமுடி உதிர்வு. இந்தப் பிரச்சனைக்கான சிறந்த தீர்வை அனிதா சம்பத் தன் யூடியூப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். வெறும் இரண்டே பொருள்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய வெங்காய எண்ணெய் பற்றிய ரெசிபியை அனிதாவே பகிர்ந்திருக்கிறார்.
Advertisment
"இயற்கையான முறையில் நம் தலைமுடியை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம் என்பதைப் பார்க்கலாம். வெங்காயத்தில் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஏராளமான நற்குணங்கள் உள்ளன. அதிலும் சின்ன வெங்காயத்திற்கு அதற்கான சக்தி அதிகம்.
இரண்டு கைப்பிடி சின்ன வெங்காயத்தை எடுத்து நன்கு மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு, ஒரு கடாயில் தேவையான சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, காயவைக்கவும். பிறகு நாம் ஏற்கெனவே அரைத்த வெங்காயத்தை நன்கு பிழிந்து எண்ணெய்யில் சேர்க்கவும். குறைந்த தீயில் நன்கு வறுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு இந்தக் கலவை நன்கு ஆறியபிறகு, எண்ணெய்யைத் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். துணி உபயோகித்து வடிகட்டுவது சிறந்தது. அவ்வளவுதான் வெங்காய எண்ணெய் ரெடி. இதனைத் தலையில் தேய்ப்பதற்கு முன்பு லேசாக சுடவைத்து தேய்த்து மசாஜ் செய்யலாம். நிச்சயம் இதுபோன்று வாரம் இருமுறை செய்து வந்தால் முடி சீராகவும் அடர்த்தியாகவும் வளரும்.
அதேபோல சுத்தமான ஃப்ரெஷ் தேங்காய்ப் பால் எடுத்து, அதனை முடியின் வேர்வரை படும்படி தேய்த்து மசாஜ் செய்து குளித்தாலும் அடர்த்தியான முடி நிச்சயம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil