இதைச் செய்தால் உங்கள் முகமும் பளபளக்கும்! அனிதா சம்பத் 7 டிப்ஸ்

Anita Sampath Acne Pimple prone skin tips அனிதா சம்பத் பகிர்ந்துகொண்ட முகப்பருக்களுக்கான ஏழு எளிமையான டிப்ஸ் என்னவென்று பார்க்கலாமா!

Anita Sampath shares Acne Pimple prone skin tips Tamil News
Anita Sampath shares Acne Pimple prone skin tips Tamil News

Anita Sampath shares Acne Pimple prone skin tips Tamil News : தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பரீட்சையமான அனிதா சம்பத், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘6 மணி செய்திகள்’ நிகழ்ச்சி அதீத வரவேற்பு பெற்றதற்குக் காரணம் அனிதா சம்பத் தான். அதனைத் தொடர்ந்து ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சி அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது.

அனிதாவின் தமிழ் உச்சரிப்பு, நேர்த்தியாக உடுத்தும் உடை ஆகியவற்றுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். இந்நிலையில், பிக் பாஸ் ஷோவிற்கு சென்றவர் பெரும்பாலானவர்களின் வெறுப்பையே சம்பாதித்தார். இருப்பினும், தற்போது தன் யூடியூப் பக்கத்தின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட பியூட்டி டிப்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனிதா சம்பத் பகிர்ந்துகொண்ட முகப்பருக்களுக்கான ஏழு எளிமையான டிப்ஸ் என்னவென்று பார்க்கலாமா!

1. ஸ்க்ரப் செய்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். பருக்களை ஸ்க்ரப் செய்தால் மேலும் பருக்கள் பெரிதாகும் அபாயம் இருக்கிறது. மேலும், ஸ்க்ரப் செய்வதனால் முகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, முற்றிலும் ஸ்க்ரப்பிங்கை தவிர்க்கவேண்டும்.

2. பருக்களைத் தொடவே கூடாது. முக்கியமாகக் கிள்ளக்கூடாது. இதுதான் பருக்கள் வடுவாக மாறுவதற்கான காரணமாக அமைகிறது. சில வடுக்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

3. மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது சிறந்தது. ஆனால், எண்ணெய் கலந்த மாய்ஸ்ச்சரைசர் விடத் தண்ணீர் கலந்த மாய்ஸ்ச்சரைசரை தேர்ந்தெடுங்கள்.

4. முகத்தைச் சிலர் அதிகப்படியாகக் கழுவுவார்கள் அல்லது சிலர் கழுவவே மாட்டார்கள். நிச்சயம் ஒரு நாளுக்கு மூன்று முறை முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். வெளியே சென்று வந்தால் எக்ஸ்டரா ஒருமுறை கழுவலாம்.

5. ஈரப்பதமுள்ள வைப்ஸ் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிர்க்கலாம். அதில் சோப் துகள்கள் இருப்பதனால் வெட் வைப்ஸ் உபயோகித்தாலும் பத்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடுங்கள்.

6. பருக்கள் அதிகம் உள்ளவர்கள், மேக் அப் போடுவதைத் தவிர்க்கலாம். அப்படியே மேக் அப் போட்டாலும், நிச்சயம் அதனைச் சுத்தம் செய்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். இல்லையென்றால் மேலும் பருக்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

7. முகத்தைத் துடைப்பதற்கு எப்போதும் மெல்லிய துணியைப் பயன்படுத்துங்கள். டர்க்கி துணியைத் தவிர்ப்பது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anita sampath shares acne pimple prone skin tips tamil news

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express