அனிதா வீட்டில் ‘குவா குவா’ விசேஷமா? – திருமண நாள் ஸ்பெஷல் யூடியூப் வீடியோ!

Anita Sampath Wedding Anniversary Latest Youtube Video பிரபா ஆரம்பித்திருக்கும் புதிய சேனல் பற்றிய இன்ட்ரோவை கொடுத்துவிட்டு காணொளியை நிறைவு செய்தனர்.

Anita Sampath Wedding Anniversary Latest Youtube Video
Anita Sampath Wedding Anniversary Latest Youtube Video

Anita Sampath Wedding Anniversary Latest Youtube Video : தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் எப்போதுமே ட்ரெண்டிங் கன்டென்ட்டுகளை கொடுத்து வரும் அனிதா சம்பத், சமீபத்தில் தன்னுடைய திருமண நாள் கொண்டாட்ட காணொளியைப் பதிவேற்றியுள்ளார். விரைவில் நல்ல செய்தி சொல்லப் போகிறோம் என்று சொன்னது முதல் பிரபா தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் தொடங்குவது முதல் ஏராளமான சுவாரசிய விஷயங்கள் இந்த காணொளியில் உள்ளன.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வரை தங்களால் கவர் செய்ய முடிந்த அனைத்தையும் இந்த காணொளியில் பதிவு செய்திருந்தனர். தங்கள் வீட்டுப் பூஜையில் தொடங்கியது இந்த காணொளி. பிறகு, தன்னுடைய மாமியார் கொடுத்த கத்தையான பணத்தை பிரபாவிடம் காட்டி கடுப்பேற்றினார். அதனைத் தொடர்ந்து தன் தாய் வீட்டிற்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தவர்கள், விரைவாக இட்லி சாப்பிட்டுவிட்டு, எளிமையான ஹேர்ஸ்டைல் ஒன்றையும் அனிதா சொல்லிக்கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

‘கண்ணம்மா கண்ணம்மா..’ எனப் பாடல் ஒலிக்க, தங்களின் கார் பயணத்தையும் பதிவு செய்ய மறக்கவில்லை. அனிதாவின் தாயின் வீட்டை அடைந்ததும், அவர்களை வேகமாக ஓடிவந்து வரவேற்றது அனிதாவின் செல்ல நாய்க்குட்டி செர்ரி. பிறகு வயிறு முட்ட நன்கு சாப்பிட்டுவிட்டு, இருவரும் இளைப்பாறினார்கள். அப்போது, உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று பொடிவைத்த பேசிய அவர்கள், நிச்சயம் நீங்கள் நினைப்பது போல எந்த விஷயமும் அல்ல என்று அதனை அப்படியே மாற்றினார்கள்.

மேலும், அடுத்த வருடத் திருமண நாளுக்குள் அனிதாவிற்குத் தெரியாமல் ஏராளமான பிளான்ஸ் வைத்திருப்பதாகக் கூறினார் பிரபா. பிறகு, அனிதா, பிரபாவிற்குத் தனியாக வேறு பரிசு கொடுத்துவிட்டதாகவும் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்றும் மீண்டும் ஒருமுறை பொடிவைத்துக் கூறினார் அனிதா. ஆனால், மீண்டும் அது நீங்கள் நினைப்பதுபோல் ‘குவா குவா’ விஷயமல்ல என்று நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, 6 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களுக்கு நன்றி தெரிவித்தும், அனிதா மிகவும் பிசியாக இருப்பதனால் அதற்கென்று தனியாகக் காணொளி பதிவேற்ற முடியவில்லை என்பதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, கேக் கட் செய்து சாப்பிட்டுவிட்டு, அனிதா அம்மாவின் வீட்டிலிருந்து இருவரும் புறப்பட்டனர். தங்களின் வீட்டை அடைந்ததும், மீண்டும் ஒருமுறை நன்றி கூறிவிட்டு, பிரபா ஆரம்பித்திருக்கும் புதிய சேனல் பற்றிய இன்ட்ரோவை கொடுத்துவிட்டு காணொளியை நிறைவு செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anita sampath wedding anniversary latest youtube video

Next Story
சூடான நீர், ஒரு ஸ்பூன் எண்ணெய்… சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட்ஸ் தெரிஞ்சுக்கோங்க!chapati recipe in tamil: simple steps to make soft chapati in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com