உறை ஊற்றி கலக்கவே வேண்டாம்; கெட்டியான தயிர் ரகசியம் இதுதான்: அனிதா குப்புசாமி
கெட்டியான தயிருக்கு எவ்வாறு உறை ஊற்ற வேண்டும் என அனிதா குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார். இந்த சிம்பிளான டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் நம் வீடுகளிலும் கெட்டியான தயிரை தயாரிக்க முடியும்.
அறுசுவை விருந்து படைத்தாலும் சிலருக்கு விருப்பமான உணவாக தயிர் சாதம் இருக்கிறது. செரிமானத்திற்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்பதில் தொடங்கி பல்வேறு சத்துகளும் தயிரில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்த சூழலில், தயிருக்காக உறை ஊற்றினால் அவை கெட்டியாக இருப்பதில்லை என பலர் கூறுவார்கள். அந்த வகையில் தயிர் கெட்டியாக இருப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஈசியான டிப்ஸ்கள் குறித்து அனிதா குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார். அவற்றை தற்போது பார்க்கலாம்.
தன்னுடைய வீட்டில் கல் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உறை ஊற்றி வைப்பதாக அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். இது போன்ற பாத்திரங்கள் இல்லாதவர்கள், வழக்கமாக பயன்படுத்தும் சாதாரண பாத்திரங்களில் உறை ஊற்றி வைக்கலாம்.
இதையடுத்து, உறைக்காக ஊற்றும் போது அதற்காக பயன்படுத்தும் தயிரை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம். இதனை ஊற்றிய பின்னர் கலக்காமல் அப்படியே விட்டு விட வேண்டும். கலக்காமல் தயிரை ஊற்றும் போது தான் அவை கெட்டியாக இருக்கும் என்று அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், வெளிச்சம் சற்று குறைவான இடத்தில் இந்த பாத்திரத்தை வைத்தால் விரைவாக உறைவிட்டு விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறையை பின்பற்றும் போது தயிர் கூடுதல் சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி - Anitha Pushpavanam Kuppusamy - Viha Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.