தனக்கு பிறந்த ஆண் குழந்தை மருத்துவரின் அலட்சியதால் இறந்துவிட்டதாக அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அனிதா குப்புசாமி ஐ.பி.சி பக்தி யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது ” பக்தி எப்படி உள்ளது என்பதை என்னால் முழுமையாக விவரிக்க முடியாது. அது ஒரு உணர்வு. அதை நாம் உணர முடியும். சின்ன வயதில் இருந்து அம்மாளைத்தான் கும்பிடுவேன். யாருக்கும் தெரியாத உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தையாக பல்லவி பிறந்தார். 2ம் வது பிள்ளை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கடவுளிடம் வேண்டினேன். அந்த குழந்தை மிகவும் அழகாக வெள்ளை நிறத்தில் இருக்கும். மருத்துவரின் அலட்சியத்தால் இது நடந்துதது. 24 மணிநேரத்தில் எதோ ஒரு ஊசி செலுத்தியதால் நெஞ்சுப் பகுதி முழுவதும் எரிந்தது. அதிலிருந்து நான் அம்பாளிடம் எதுவும் வேண்டும் என்று வேண்டுவது இல்லை. நான் ஆசையாக கேட்ட ஆண் குழந்தையை அவர்கள் கொடுத்தார்கள். ஆனால் எனது அறியாமையால் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. நான் சொன்னால் அனைவரும் மிகைப்படுத்தி பேசுவதாக கூறுவார்கள்.
முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் 10 வருட இடைவேளை உள்ளது. முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தை பிறக்காது வாய்ப்பில்லை, கருப்பையில் அடைப்பு இருப்பதாக சொல்லிவிட்டார்கள். நான் அம்பாளிடம் மீண்டும் வேண்டினேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கு 2 வது குழந்தை பிறந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை சிசேரியன் செய்ய வேண்டும் என்று மருத்துவரே என்னை அழைத்து சொன்னார்கள்.
இரண்டு குழந்தைகளையும் பார்த்துகொள்ள ஆட்களை வைத்திருந்தோம். அப்போது பாடல் கச்சேரிகள் அதிகம். ஒரு 30வயது பெண்தான் எனது குழந்தையை பார்த்துகொண்டார். ஒரு நாள் இரவில் கச்சேரியை முடித்த பிறகு நாங்கள் வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது வீட்டில் உள்ள போனில் கால் வந்தது. 7 முறை அடித்தும் யாரும் பேசவில்லை. 8வது முறையாக நான் போனை எடுத்தபோது குழந்தை சிரித்தது. இரவில் நான் தூங்கிவிட்டேன் . ஆனால் என் கணவர் தூங்கவில்லை. கணவர் கீழே போனை எடுக்க வந்தபோதுதான், கேஸ் வாசனை வீசியதாக தெரிந்துள்ளது. எந்த விளக்கை போடாமால். எல்லா ஜன்னல், கதவுகளை திறந்து விட்டு அப்படியே உட்கார்ந்து இருப்பதாக கூறினார். இதுவே நீ கிழே வந்திருந்தால் முதலில் லைட்தான் போடுவாய் என்று கணவர் கூறினார். அந்த தொலைபேசி அம்பாளிடத்தில் இருந்துதான் வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு சம்பவம்தான் இன்னும் நிறைய சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளது’ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“