விவசாய தொழில் பார்ப்பவர்கள் அனைவரும் மாட்டுப் பொங்கலை நிச்சயமாக கொண்டாடுவார்கள். பொங்கல் என்பது நன்றி தெரிவிக்கும் பண்டிகை தான். அந்த வகையில் முதல் நாள் சூரிய பகவானுக்கும், இரண்டாவது நாள் உழவுக்கு பெரிதும் உதவும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
இன்றளவும் சில இடங்களில் மாடுகளை உழவுக்காக பயன்படுத்தும் முறை தொடர்ந்து நடைபெறுகிறது. எனினும், மாடுகளை பயன்படுத்தவில்லை என்றாலும், அவை வணங்க தகுந்த ஜீவன் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகள் உணவு உற்பத்தி செய்வதால் அவர்களை வணங்கி நன்றி தெரிவிக்கிறோம். அதேபோல், பலருக்கு பால் வழங்கும் மாடுகளையும் வணங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களும் மாட்டு பொங்கல் கொண்டாடுவதற்கான குறிப்புகளை அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். மாடு, கன்று இணைந்த கோமாதா சிலை அல்லது படங்களை முதலில் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் கோமாதா வழிபாடு செய்யலாம். இவ்வாறு கோமாதா வழிபாடு செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கி, வேலைவாய்ப்புகள் பெருகி, செல்வம் சேரும் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். காலை நேரத்தில் 11:30 மணிக்குள்ளாகவும், மாலையில் 5:45 மணிக்கும் வழிபாடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.