தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
Advertisment
ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத்தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது.
அண்ணாமலை கத்தரி, பச்சை குண்டு கத்தரி, பச்சையில நீளமா வளர்ற கத்தரி, மரி கத்தரி என கத்தரியின் அனைத்து வகைகளும், அடுக்கு மல்லி, குண்டு மல்லி, மதுரை மல்லி, கனகாம்பரம், பாரிஜாதம், செண்பகப்பூ , நித்தியமல்லி, ரோஜாச்செடி என பலவகையான பூக்களும் இந்த தோட்டத்தில் உள்ளன. பாவக்காய், எலுமிச்சை, மாதுளை என வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும், மாடித் தோட்டத்தில் இருந்தே முற்றிலும் இயற்கையாக உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அனிதா யூடியூப் ஷார்ட்ஸில் பகிர்ந்துள்ள வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீட்டுல புளிச்ச கீரை வாங்கிட்டு வந்தாங்க. அது நேரத்துக்கு சமைக்க முடியல. 4 நாள் ஆச்சு, அப்படியே வாடிப் போயிடுச்சு,
நான் வாடிப் போன, அழுகுன இலைகளை எல்லாம் நீக்கிட்டு அந்த தண்டு எடுத்து மாடித் தோட்டத்துல வச்சிட்டேன். என் வீட்டுக்காரர் இதெல்லாம் வராதுன்னு சொன்னாரு.
நான் கட்டாயம் வரும் சொல்லிட்டேன் வச்சேன். இப்போ தளதன்னு வளர்ந்து இருக்கு,, என்று அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“