New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Anitha-2.jpg)
Anitha kuppusamy roof gardern youtube shorts video went viral
புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
Anitha kuppusamy roof gardern youtube shorts video went viral
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அனிதா குப்புசாமி கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார். அந்த நேரத்தில் அவர் ஜெயா டிவி.யில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து அனிதா விலகினார்.
புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது. 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில்’ வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அனிதா யூடியூப் ஷார்ட்ஸில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவரது வீட்டு மொட்டை மாடித் தோட்டத்தில் சிவப்பு, பிங்க், மஞ்சள் என பல வண்ணங்களில் செம்பருத்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. அதைப் பார்த்த பலரும் அந்த வீடியோவை லைக் செய்து’ செடிகள் பூத்துக் குலுங்க என்ன செய்வது என்று அனிதாவிடம் குறிப்புகளை கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.