விநாயகர் படம் முக்கியம்: சித்ரா பவுர்ணமி வழிபாடு பற்றி அனிதா குப்புசாமி வீடியோ
பிரபல நாட்டுபுறப் பாடகி அனிதா குப்புசாமி, 2023-ம் ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி வழிபாடு குறித்தும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை, வழிபாட்டில் விநாயகர் படம், தேதி, நேரம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார்.
பிரபல நாட்டுபுறப் பாடகி அனிதா குப்புசாமி, 2023-ம் ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி வழிபாடு குறித்தும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை, வழிபாட்டில் விநாயகர் படம், தேதி, நேரம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார்.
Advertisment
சித்ரா பவுர்ணமி எந்த தேதியில் வருகிறது. எந்த நேரத்தில், எப்படி வழிபாடு செய்ய வேண்டும், சித்ரா பவுர்ணமி நாளில் வழிபாடு செய்தால் என்ன பலன் என்பதைக் குறித்து பிரபல நாட்டுபுறப் பாடகி யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மாதங்கள் எல்லாமே அந்த மாதங்களில் பவுர்ணமி நாளில் வரும் நட்சத்திரங்களுடன் தொடர்புடையது என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சித்திரை மாத பவுர்ணமி நாளி மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. சித்ரா பவுர்ணமி வழிப்பாடு குறித்து அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், சித்திரை மாதத்துக்கும் சித்ரகுப்தனுக்கும் விநாயகருக்கும் பார்வதி தேவிக்கும் தொடர்பு உள்ளது என்று அதற்கான புராண கதைகளையும் அனிதா குப்புசாமி கூறுகிறார். சித்ரா பவுர்ணமி நாள் சித்ரகுப்தன் உருவான நாள், சித்ரகுப்தன் திருமண நாள் என்று கூறப்படுகிறது என்று கூறுகிறார்.
பூஜை அறையில் ஒரு மனை விரித்து பிள்ளையார் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார். சித்ரா பவுர்ணமி நாளில் விநாயகரை கட்டாயம் வணங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். சித்ரகுப்தன் படத்தையும் வைத்துக்கொள்ளலாம். படம் இல்லாவிட்டாலும் பூஜை செய்யலாம். எழுத்தாணி ஓலை வைத்து பூஜை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக நோட்டு புத்தகம் பேனா வையுங்கள். தலைவாழையில், இனிப்பு பொங்கல் வையுங்கள். மத்து, அம்மி பாரம்பரிய பொருட்களை வையுங்கள். சித்ரா பவுர்ணமி பூஜையை காலையிலேயே செய்யுங்கள். சித்ரகுப்தனுக்கு பூஜை செய்யுங்கள்.
சித்ரா பவுர்ணமி நாளில் உடல்நிலை ஒத்துழைப்பவர்கள் விரதம் மேற்கொள்ள வேண்டும். நைவேத்தியம் செய்த பொருட்களை சாப்பிடலாம். மறுநாள் காலை விரதம் துறக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனை வழிபடுவதோடு, அனைவரும் தானம் செய்ய வேண்டும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"