விஜய தசமி அன்று என்னென்ன வழிபாடு செய்ய வேண்டும்? கொலு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அம்மனை எந்த வடிவத்தில் வழிபட வேண்டும்? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
விஜயதசமி வழிபாடு தொடர்பாக பாடகி அனிதா குப்புசாமி, தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில், அம்மன் 9 நாட்கள் அசுரர்களுடன் போரிட்டு 10 ஆவது வெற்றி பெறும் நிகழ்வை தான் விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அன்று அம்பிகை ரூபத்தில் அம்மனை வழிபட வேண்டும்.
விஜய தசமி அன்று வாசனை பூக்கள் கொண்டு பூஜை செய்வதோடு, பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள் செய்ய வேண்டும், இதனால் இன்று எல்லா காரியங்களும் வெற்றி பெறும். இந்த நன்னாளில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சிறந்த நாள் இது. உங்கள் வீட்டில் நெல்லில் உங்களுக்கு குழந்தைகளுக்கு எழுதக் கற்றுக் கொடுங்கள்.
கொலு மற்றும் கலசம் வைத்திருப்பவர்கள் காலையிலேயே நல்ல நேரத்தில் அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். அப்போது இனிப்பு பலகாரத்தை வைத்து வழிபட வேண்டும். கலசத்தில் உள்ள நீரை வீடு முழுவதும் தெளியுங்கள். கலசத்தில் அரிசி வைத்திருந்தால், சமைத்து நீங்கள் உண்பதோடு, பிறருக்கும் பகிர்ந்தளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“