தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய பாடல் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி- அனிதா. இந்த தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்
Advertisment
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சில பயனுள்ள குறிப்புகளை அனிதா குப்புசாமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் அனிதா பேசியதாவது; சிலர் காலையில எழுந்திருக்கும் போது, அன்றைக்கு பூத்த மலர் போல, அழகா, ஃபிரெஷா இருப்பாங்க. அவங்க சிந்தனையும் தெளிவாக இருக்கும். ஆனால் பலர் தூங்கி எழும்போதே சோர்வாகக் காணப்படுவாங்க. அவங்களோட முகத்துல அசதி இருந்துட்டே இருக்கும். அவங்ககிட்ட போய் கேட்டா, நான் 8 மணி நேரம் நல்லதான் தூங்குறேன். ஆனா, காலையில எழுந்திருக்கும் போது, ரொம்ப அசதியா இருக்கு. தூங்குன மாதிரியே இல்ல. கை, கால் எல்லாம் வலிக்குது. இன்னைக்கு பொழுது நான் எப்படி ஓட்ட போறேன்னு தெரியலைனு சொல்லிட்டே இருப்பாங்க..
இது ஒரு நாள், ரெண்டு நாள் இருந்தா பரவா இல்லை. தொடர்ந்து இந்த மாதிரி அசதியாவே அவங்க எந்திரிப்பாங்க. நல்ல தூங்கியும் அசதியா இருக்குன்னு, மருத்துவர்கிட்ட போனாங்கனா, அவங்க மல்டி-வைட்டமின் கம்மியா இருக்கு, ரத்த சோகை இருக்கு, கால்சியம் பற்றாக்குறை இருக்குனு, அதை சரி பண்றதுக்கு மருந்து, மாத்திரை எழுதிக் கொடுப்பாங்க.. ஆனா, அதை சாப்பிட்டும் ரொம்ப சோர்வா இருக்கு, சுறுசுறுப்பா இல்லனு நினைக்கிறவங்களுக்கு தான் இந்த பதில்..
இன்னைக்கு நம்ம எல்லாருமே அலாரம் வச்சு எந்திக்கிறதுதான் பழக்கம். காலையில அலாரம் அடிச்ச உடனே, அலறிக்கிட்டு எந்திரிப்பாங்க. தங்களோட வேலை எல்லாம் முடிச்சுட்டு, உடனே சமையல் கட்டுக்குள்ள போவாங்க.. இப்படி செய்றது சரியில்லை.
அலாரம் அடிச்ச பிறகு, ஒரு மூன்று நிமிடம் உங்களுக்காக செலவிடுங்க. அந்த பொன்னான நேரம் தான், அன்னைக்கு நாள் முழுக்க உங்களை சுறுசுறுப்பா வைத்திருக்கும்.
நீங்க எந்த பொசிஷன்ல படுத்திருந்தாலும், அலாரம் அடிச்ச உடனே, சட்டுனு எந்திக்காம, திரும்பி நேரா படுக்கனும். ஒரு 4-5 முறை ஆழமா மூச்சு உள்ளே இழுத்து வெளியே விடனும். வெளியில விடும் காத்து அதிகமா இருக்கணும். இதனால பிராண சக்தி அதிகமா கிடைக்கும்.
பிறகு, வலதுபக்கமா படுத்து, அப்புறம் நிதானமா எழுந்தா, ரொம்ப பிரெஷ்ஷா இருப்போம். இப்படி செய்ஞ்சா அந்த நாள் முழுவதும் நீங்க புத்துணர்வா இருக்கிறத உணர்வீங்க.. நம்ம, மேல் மூச்சு, கீழ் மூச்சு மெதுவாக இழுப்பது சித்த யோகத்தில் சொல்லப்பட்டிருக்கு. வலது பக்கம் திரும்பி படுத்து எழும்போது, ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். நம்முடைய மனம், எண்ணங்கள் எல்லாம் வலிமை பெறும்.
எனவே காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பிராண சக்தியை சிறப்பாக செயல்படுத்துவதால், நம் உடலும், மனமும் ஒரு நிலைப்பட்டு நாம் சுறுசுறுப்பாக இருப்போம். இப்படி பல குறிப்புகளை அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“