பாடகி மற்றும் சின்னத்திரை பிபலமான அனிதா குப்புசாமி, பெண்களுக்கு பிரத்யேகமான காணொலி ஒன்றை அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
“ உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், நான் மனநல ஆலோசனையும் வழங்கி வருகிறேன். நான் சைக்காலஜி படித்திருப்பதால், மனநல ஆலோசனை வழங்கி வருகிறேன். என்னிடம் அலோசனை பெற்ற பலரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பொதுவாக என்னிடம் அலோசனை பெற வரும் கணவன் –மனைவி இதைதான் கூறுகிறார்கள். தாம்பத்தியத்தில் மனைவி ஈடுபட மறுக்கிறார் என்றும், கோவில், விரதம் என்று காரணம் சொல்கிறார் என்று கணவன் புகார் கூறுவார். மனைவியிடம் இது பற்றி கேட்டால், நான் விரதம் இருக்கிறேன். நான் சுத்தமாக இருக்க வேண்டும். இதில் ஈடுபட என்ணம் இல்லை என்று மனைவி கூறுவார்.
கடவுள் என்று வந்தாலே பெண்களுக்கு பயமும் பக்தியும் கலந்து வந்துவிடுகிறது. பக்தி இருக்கலாம். ஆனால் பயம் இருக்ககூடாது. இதை செய்தால் தெய்வ குத்தம் ஆகிவிடுமோ ? அதை செய்தால் தெய்வ குத்தமாகிவிடுமோ? என்று நினைப்போம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. தாமத்தியத்தில் ஈடுபட வேண்டாம் என்று கடவுள் எப்போதும் சொன்னது இல்லை. அடுத்த சந்ததிகள் வர வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்து கொள்கிறோம்.
அந்த காலத்தில் பெண்கள் பூஜை செய்தார்கள். மந்திரம் சொன்னார்கள். பெண்கள் எதை செய்தாலும், அதில் லயித்து போவார்கள். இதனால் அவர்களால் பூஜை செய்வதிலும், மந்திரம் சொல்வதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால்தான் இதிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டார்கள். வீட்டில் மட்டும் பூஜை செய்யலாம் என்று விதிகள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, மெத்தை விரிப்பை சுத்தம் செய்யத்தான் வேண்டும். ஆனால் அதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்க கூடாது. உங்களுக்கு வேண்டுமானால், 4 மெத்தை விரிப்பை வாங்கி வைத்துகொள்ளுங்கள். தாமத்தியத்தில் ஈடுபட்ட பிறகு மெத்தை விரிப்பை சுத்தம் செய்துவிட்டு. குளித்துவிட்டு பூஜை செய்யுங்கள். உங்களது கணவர் குறைப்பட்டுக் கொண்டால், எப்படி உங்களால் மட்டும் இறைவனை எப்படி வேண்டுக்கொள்ள முடியும். மேலும் உங்கள் கணவருக்கு கடவுள் என்றாலே வெறுப்பாக இருக்கும். இதற்கு நீங்களும் ஒரு காரணமாகிவிடுவீர்கள். அப்படியெல்லாம் ஆக வேண்டுமா? .
மேலும் இதனாலே உங்கள் கணவர் பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தர வேண்டாம் என்று நினைப்பார். என்னிடம் வரும் பெண்கள் தாமத்தியத்தை தவறான ஒன்றாக பார்க்கிறார்கள். நான் எடுத்து சொன்ன பிறகு புரிந்துகொள்வார்கள்.
மேலும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் என்ன வேண்டுமோ அதை நாம் மறுக்காமல் செய்து தர வேண்டும். நான் பகிர்ந்து கொண்டதில் ஏதேனும் கேள்விகள் இருக்குமானல் அதை கமெண்டில் கேளுங்கள்” என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.