பிரபல தொகுப்பாளினி அனிதா சம்பத், தனது பளபளப்பான கூந்தலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு, அவரது ஆலோசனைகள் நிச்சயம் கைகொடுக்கும்.
"என்னோடது எல்லாமே நேச்சுரல் ஹேர். சொல்லப்போனா, இப்ப வந்து மூணுல ஒரு பங்குதான் இப்ப எனக்கு இருக்கு. நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் மீடியாவுக்கு வரும்போது நல்லா இருந்தது. ஆனா, ஹீட் பண்ண வேண்டியது நம்மளோட வேலையில ஒரு பார்ட். அதை ஹீட் பண்ணி, ஹீட் பண்ணி குறைஞ்சுருச்சு.
Advertisment
ஹீட்டிங் டூல்ஸ் நான் அதிகமா யூஸ் பண்ண மாட்டேன். அதை யூஸ் பண்ணா முடி போயிடும். கண்டிஷனர்லாம் ஸ்கால்ப்ல (மயிர் நுனியில்) படுற மாதிரி யூஸ் பண்ணக் கூடாது. கீழதான் யூஸ் பண்ணனும். நல்லா எண்ணெய் வைப்பேன்.
தலை குளிக்க முன்னாடி காஞ்ச தலையில தண்ணி ஊத்தவே மாட்டேன். அப்படி காஞ்சிருந்ததுன்னா, அந்த ஈவென்ட்டுக்கு கொஞ்சம் லேட்டா போவேன். எண்ணெய் வச்சுட்டு திரும்பியும் தான் நான் அதை பண்ணுவேன். இன்னொன்னு ஓவர் நைட் எண்ணெய் தான் வைப்பேன். ஓகே, முடியலனா ஒரு ஹாஃப் அன் ஹவராவது வச்சுட்டு போவேன்”, என்று அனிதா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
அனிதாவின் இந்த எளிய குறிப்புகள், செயற்கையான பராமரிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான முறையில் முடியைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். நீங்களும் இந்த குறிப்புகளைப் பின்பற்றி ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாமே!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news