anitha sampath husband bigg bos anitha sampath : சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு. இப்படி ஒரே நைட்டில் ஓபாமா ஆனவர் தான் சன் டிவி அனிதா சம்பத். ஆரம்பத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா. சன் டிவிக்கு மாறிய சில மாதங்களிலே இண்டர்நெட்டில் ஃபேமஸ் ஆகினார்.
Advertisment
இவரின் தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து, ‘சர்கார்’, ‘காப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் தோன்றினார்.
அனிதாவின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் அனிதா அனிதா ஹாஷ்டேக்குகள் தான்.அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவரது சில அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகும் செய்தி வாசிப்பாளராக தனது பணியை சிறப்பாக செய்த அனிதா சம்பத் சமீபத்தில் “EMERGENCY” என வெப் சீரிஸில் நடித்தார். அதுவும் ஹிட் அடித்தது. இவருடன், அவருடன் ஆர், ஜே. ஆனந்தா, ஹரிஜா என இணையதள பிரபலங்கள் நடித்திருந்தனர்.
எமர்ஜென்சி வெப் சீரிஸில் அனிதா டாக்டராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் அனிதா, யாரும் எதிர்பார்க்காத வகையில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கி அதிலும் அசத்தினார்.nithasampath Vlogs என்ற அனிதாவின் யூடியூப் பக்கத்தில் பெண்களுக்கான பல குறிப்புகள், வீட்டை அலங்காரம் செய்வது எப்படி? மேக் அப் டிப்ஸ் என கலக்கினார் அனிதாவிடம் இவ்வளவு பன்முக திறமைகள் இருப்பது அனைவரையும் அசர வைத்தது.
அவர் வெளியிட்டு அனைத்து வீடியோக்களும் லைக்ஸ்களை அள்ளியது. அனிதாவின் இந்த முயற்சிக்கு அவரின் கணவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், தான் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் 4 தமிழ் சீசனில் அனிதா 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், அனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளை வீட்டினுள், ரசிகர்களிடம் சந்தித்து வருகிறார். குறிப்பாக அனிதாவை எல்லோரும் ஓவர் எமோஷனல் என்கின்றனர். அவரும் பிக் பாஸ் வீட்டில் ஒரு முறை இதை பதிவிட்டார். ஆம் அது உண்மை தான், அவரின் காதல் திருமணம், அதுக்குறித்து வெளியான சர்ச்சைகள் என அவர் திருமணத்தை பற்றி பேசிய எல்லா பேட்டிகளிலும் அனிதா எமோஷனலாக தான் பதிவு செய்துள்ளார். நீங்களே பாருங்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”