/indian-express-tamil/media/media_files/1T9mldiHVPsTWD99EfGt.jpg)
Anitha Sampath
அனிதா சம்பத் சமீபத்தில் தன் கணவருடன் துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு, ஜூமைரா நகரில் புர்ஜ் அல் அரப் ஹோட்டல், இரவு படகில் டின்னர் என ரசித்த போது எடுத்த வீடியோஸை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த துபாய் தற்போது சொர்க்க லோகம் போல மாறியிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரம் அதன் ஷாப்பிங் மால்கள், அதிநவீன கட்டிடக்கலை மற்றும் ஒரு உயிரோட்டமான இரவு வாழ்க்கைக்கு புகழ்பெற்றது.
துபாயின் சுற்றுலா ஈர்ப்புகளில் முக்கியமானது, சிறு கப்பல்களில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில், இரவு உணவு அருந்துவது. க்ரீக் மற்றும் மரீனா ஆகிய இரண்டு இடங்களில் இதுபோன்ற கப்பல் உணவகங்கள் உள்ளன.
ஒருவேளை நீங்க துபாய் போனா கண்டிப்பா இந்த இடங்களை பார்க்க மறக்காதீங்க…
உங்களுக்கும் துபாய் போக ஆசையா?
சமீபத்திய ஆண்டுகளில், துபாய் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியர்களின் வருகையை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஐந்து ஆண்டு காலத்திற்கான மல்டிபிள் விசா முறையை துபாய் நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மல்டிபிள் என்ட்ரி விசாவை, துபாயின் GDRFA என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விசாவை விண்ணப்பித்த இரண்டு முதல் ஐந்து நாட்களில் பெற முடியும்.
இந்த விசா வாயிலாகஒருவர் அதிகபட்சம் ஓராண்டில் 180 நாட்கள் துபாயில் இருக்கலாம்.
விசாவுக்கான காலக்கட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம். அங்கிருந்து இந்தியாவுக்கும் திரும்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.