Anitha Sampath Vlog Surprise Viral Youtube Video Tamil News : கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, ஆரம்பத்தில் நெகட்டிவ் கமென்ட்டுகளை பெற்றிருந்தாலும், நிகழ்ச்சின் இறுதியில் பாசிட்டிவாக மாறிய அனிதா சம்பத்திற்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், அவருடைய யூடியூப் சேனலில் தன் கணவர் பிரபாவோடு இணைந்து போடும் காணொளிகளுக்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்த வரிசையில் சமீபத்தில் அனிதாவிற்கு பிரபா சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த காணொளி ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் அனிதாவின் கியூட் ரியாக்ஷனை மக்கள் ரசித்து பாராட்டி வருகின்றனர்.

கடந்த 15 நாள்களாக திண்டுக்கல்லில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அனிதாவை, சர்ப்ரைஸாக சென்று பார்க்கப்போகிறார் பிரபா. இதுதான் காணொளியில் ஆரம்பத்தில் பிரபா நம்மோடு பகிர்ந்துகொண்டது. பிறகு தன்னுடைய காரில் தன் நண்பரோடு பயணம் செய்கிறார். மழை பெய்துகொண்டிருந்த காரணத்தால், அவர்கள் நினைத்த நேரத்திற்கு அனிதாவை சென்று பார்க்க முடியாது என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுதான் சர்ப்ரைஸ் செய்ய முடியும் என்றும் கூறி, தன் பயணத்தைக் தொடர்ந்தார் பிரபா.
ஒரு வழியாக திருச்சி சென்றடைந்த பிரபா, வந்த வழியில் ஏற்பட்ட ட்ராஃபிக் கொடுமைகள் பற்றி பகிர்ந்துகொண்டார். பிறகு மீண்டும் தங்கள் பயணத்தை திண்டுக்கல் நோக்கி புறப்பட, வழியில் காபிக்காக அழைத்ததும், சாப்பிடும் இடத்தில் அங்குள்ளவர்கள் வாய்க்கால் தகராறில் ஈடுபட்டதையும் பகிர்ந்துகொண்டார் பிரபா.
ஒரு வழியாக திண்டுக்கல் சென்றடைந்தவர், அனிதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று செக்-இன் செய்து, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆவலோடு காத்திருந்தார். ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் திரும்பும் வரை காத்திருக்க முடியாத பிரபா, ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கே சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று எண்ணி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விரைந்தார்.
பிரபாவின் என்ட்ரியை கொஞ்சமும் எதிர்பார்க்காத அனிதா, அவரை பார்த்ததும் கொடுத்த சர்ப்ரைஸ் ரியாக்ஷனுக்குதான் இப்போது ரசிகர்கள் ஏராளம். இருவரின் அன்பும் அழகாக அந்தக் காணொளியில் வெளிப்பட்டது. ஷூட்டிங் இறுதி நாள்களில் வருவார் என்று எதிர்பார்த்த அனிதாவிற்கு முன்கூட்டியே தன் கணவர் வந்து ஷாக் கொடுத்ததை நினைத்துப் பூரித்தார். இந்த காணொளி 2 லட்சம் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங்கிலும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil