டிஃபைனர், பிரஷ் பவுச், ரோஸ் வாட்டர் ஜெல்.. அனிதா சம்பத் மேக்-அப் பேகில் இத்தனை பொருள்களா!

Anitha Sampath Youtube Viral Makeup Bag Video அதுசரி மீடியாவில் மேக்-அப்தானே எல்லாம். அதிலும் இவரிடம் இருப்பது கொஞ்சம்தானாம்.

Anitha Sampath Youtube Viral Makeup Bag Video
Anitha Sampath Youtube Viral Makeup Bag Video

Anitha Sampath Youtube Viral Makeup Bag Video : பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஏராளமான உபயோக காணொளிகளை அப்லோட் செய்து கொண்டிருக்கிறார் அனிதா சம்பத். அழகு குறிப்புகள், ஹோம் டூர், பெங்களூர், ஏலகிரி சுற்றுலா காணொளி என விதவிதமான கன்டென்ட்டுகளை வெளியிட்டு மக்களை என்டெர்டெயின் செய்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், தன்னுடைய மேக்-அப் ஹேண்ட்பேக்கில் என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதைத் தொகுத்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். 1 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கும் இந்த காணொளியில் அப்படி என்ன ஸ்பெஷல்?

3 அடுக்குகள் கொண்ட வித்தியாசமான துணியாலான பேக்தான் அனிதாவின் மேக்-அப் ஐட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ப்ரஷ் வைப்பதற்கென தனி பவுச், சில ப்ளாஷ், ஷேடோ என அத்தனை பொருள்களைக் கொண்டிருந்தாலும், இது வெறும் மினிமம் பொருள்கள்தான் என்று கூறுகிறார். அதுசரி மீடியாவில் மேக்-அப்தானே எல்லாம். அதிலும் இவரிடம் இருப்பது கொஞ்சம்தானாம்.

எடுத்ததுமே கன்சீலர் மற்றும் லிப்ஸ்டிக் கலெக்ஷனைதான் பகிர்ந்துகொண்டார். கிட்டதட்ட ஒரு 20 லிப்ஸ்டிக் மேலாக வைத்திருந்தார். அதிலும் பெரும்பாலானவை நியூட் ஷேடுகள்தான். அடுத்ததாக எப்போதுமே அவருடன் இருக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் மாய்ஸ்ச்சரைசர். மேக்-அப் போடுவதற்கு முன்பு மாய்ஸ்ச்சரைசர் மிகவும் அவசியம் என்கிற குறிப்பையும் முன்வைத்தார்.

அடுத்ததாக ஃபவுண்டேஷன் பேலட், ஐ ப்ரஷ், ஃபவுண்டேஷன் ப்ரஷ், ப்ளெண்டர் என அனைத்தையும் காட்டினார். அவை லோக்கல் பிராண்டு என்றாலும் அதன் பிரிசில்ஸ் மிகவும் மென்மையானது என்பதையும் பகிர்ந்துகொண்டார். பிறகு அவரே தயாரித்த லிப்ஸ்டிக் பேலட், ஐ ஷேடோ பேலட், பிளஷ் பேலட், ஹைலைட்டார் பேலட், ஷிம்மர், கான்டூர் பேலட், நெயில் பாலிஷ் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவர், ப்ரைமர், ஃபவுண்டேஷன், ரோஸ் வாட்டர் ஜெல், லிப் பாம், லைனர், பெர்ஃபியும், டிஃபைனர் என அவ்வளவு பொருள்களையும் இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டார். மேக்-அப் மீது அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anitha sampath youtube viral makeup bag video

Next Story
டயட் இல்லாமல் எளிதாக உடல் எடையை குறைக்க இந்த மூன்று வழிகளை பின்பற்றுங்கள்!Nutritionist suggests smart ways lose weight without crash dieting Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express