இந்த அன்னவரம் பாயாசப் பிரசாதம் ரெசிபி மிகவும் பிரலபம். ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 டீஸ்ன் நெய்
1 ஸ்பூன் பாஸ்மதி ரைஸ்
அரை கப் பாசி பருப்பு
அரை லிட்டர் பால்
3 ஸ்பூன் வெல்லம்
தண்ணீர்
முந்திரி 10
திராட்சை 10
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் பாஸ்மதி ரைஸ் சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து பாசி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரை லிட்டர் பாலை சூடு செய்ய வேண்டும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு ரெடி செய்யவும். மேலும் கொதிக்கும் பாலில் அரைத்த அரிசி, பாசி பருப்பு சேர்த்து வேக விடவும். தொடர்ந்து வெல்ல பாகை சேர்த்து கிளரவும். 15 நிமிடங்கள் கழித்து நெய்யில் முந்திரி, திராச்சை வறுத்து சேர்த்துகொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“