பெருங்காயம், மிளகு தூள்... உங்க வீட்டுல இதை செய்யுங்க; எறும்பு தலை தெறிக்க ஓடும்!

வீட்டில் எறும்புத் தொல்லை தாங்கமுடியவில்லையா, இனி கவலையே படாதீர்கள், பெருங்காயம், மிளகு தூள் இருந்தால் போதும், உங்கள் வீட்டில் இப்படி செய்தால் எறும்புகள் தலை தெறிக்க ஓடும். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

வீட்டில் எறும்புத் தொல்லை தாங்கமுடியவில்லையா, இனி கவலையே படாதீர்கள், பெருங்காயம், மிளகு தூள் இருந்தால் போதும், உங்கள் வீட்டில் இப்படி செய்தால் எறும்புகள் தலை தெறிக்க ஓடும். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

author-image
WebDesk
New Update
ants killing tips

வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் வகையில் பல பயனுள்ள டிப்ஸ்களை ஃபாதுஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அந்த வகையில், வீட்டில் எறும்புத் தொல்லையைப் போக்க பயனுள்ள 10 டிப்ஸ்களைக் கூறியுள்ளனர். Photograph: (Freepik/ YouTube/ Fathu's Samayal)

வீட்டில் எறும்புத் தொல்லை தாங்கமுடியவில்லையா, இனி கவலையே படாதீர்கள், பெருங்காயம், மிளகு தூள் இருந்தால் போதும், உங்கள் வீட்டில் இப்படி செய்தால் எறும்புகள் தலை தெறிக்க ஓடும். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

Advertisment

பொதுவாக வெயில் நாட்களில் வீடுகளில் எறும்புகள் தொல்லை தாங்க முடியாது. எறும்புகளை விரட்ட, எறும்பு மருந்து, எறும்பு சாக் பீஸ் போன்றவை பயன்படுத்தினாலும் அவை குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். இப்படி ரிஸ்க் இல்லாமல், வீட்டில் எறுப்புகளை விரட்ட ஆபத்து இல்லாத டிப்ஸ்களைப் பார்ப்போம்.

வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் வகையில் பல பயனுள்ள டிப்ஸ்களை ஃபாதுஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அந்த வகையில், வீட்டில் எறும்புத் தொல்லையைப் போக்க பயனுள்ள 10 டிப்ஸ்களைக் கூறியுள்ளனர்.

வீட்டில் எறும்புத் தொல்லையைப் போக்க பயனுள்ள 10 டிப்ஸ்கள்

Advertisment
Advertisements

வீட்டில் எறும்புகள் உள்ள இடங்களில், எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் சாக்பீஸ் இருந்தால் அதை வைத்து கோடுபோடுங்கள். சாக்பீஸில் உள்ள சுண்ணாம்பு கார்பனேட் வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது. அதனால் எறும்புகள் வராது.

இனிப்பு பொருள்கள் வைத்திருக்கும் டப்பா, பாத்திரங்களைச் சுற்றி மஞ்சள் பொடியை வைத்து கோலம் போடுவது போல ஒரு கோடு போட்டு விடுங்கள். மஞ்சள் பொடி வாசனைக்கு எறும்புகள் வராது.

மிளகு தூள் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மிளகு தூள் நெடிக்கு எறும்பு வராது. அதனால், மிளகு தூளை எறும்பு வலை இருக்கும் இடங்களில் தூவி விடுங்கள். மிளகு தூள் நெடி தாங்க முடியாமல் எறும்புகள் வராது.

ஒரு இயர் பட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அதை மஞ்சள் தூள் அல்லது மிளகு தூளில் அழுத்தி எறும்பு வலைக்குள் விடுங்கள். எறும்புகள் வராது.

சர்க்கரை டப்பாக்களில் எறும்பு புகாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு 5 கிராம்பு எடுத்து சர்க்கரை டப்பாவில் போட்டு வையுங்கள் எறும்புகள் வராது. 

ஸ்நாக்ஸ்களை எறும்புகளிடம் இருந்து பாதுகாக்க, சின்ன வாளிகளில் ஸ்நாக்ஸ்களை வைத்து மூடிவிட்டு, அந்த வாளிகளை மாட்டி வைக்கலாம். இப்படி வைக்கும்போது எறும்புகள் வராது.

வீட்டில் எங்கேயாவது எறும்பு வலை இருந்தால், எறும்பு புற்று இருந்தால் அதன் மீது பெருங்காயத் தூளைக் கொஞ்சமாக கொட்டிவிடுங்கள். பெருங்காய வாசனைத் தாங்க முடியாமல் எறும்புகள் போய்விடும்.

அதே போல வீட்டுத் தோட்டத்தில் எறும்பு வலை, எறும்பு புற்று இருந்தால், செடிகளுடன் புதியான் செடிகளையும் சேர்த்து வளருங்கள், புதினா வாசனைக்கு எறும்புகள் வராது. இல்லாவிட்டால், எறும்பு வலைகள் மீது பெருங்காயத் தூளை லேசாகத் தூவி விடுங்கள். எறும்புகள் தலை தெறிக்க ஓடிவிடும்.

பாதி எலுமிச்சை பழத்தை எறும்புகள் வருகிற இடத்தில் தேய்த்துவிட்டால், எலுமிச்சை வாசனைக்கு எறும்புகள் வராது. அதனால், எலுமிச்சை பழத்தை எறும்புகளை விரட்ட பயன்படுத்தலாம்.

ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள், இதில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன், 4 டீஸ்பூன் வினிகர் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் 100 மி.லி தண்ணீர் ஊற்றி கலந்துவிடுங்கள். இதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஸ்பிரேவை பாத்ரூமில் எறும்பு இருந்தால் அங்கே பயன்படுத்தலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: