/tamil-ie/media/media_files/uploads/2021/02/Apup.jpg)
Anupama Paramehwaran latest instagram photo viral
Anupama Paramehwaran latest instagram photo viral
Anupama Paramehwaran latest Instagram photo Tamil News : மலையாள திரைப்படமாக இருந்தாலும், இன்றுவரை 'ப்ரேமம்' என்றாலே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதில், நீண்ட சுருள் தலைமுடிகொண்ட மேரி ஜார்ஜ் கதாபாத்திரம் மூலம் தென்னிந்தியத் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். இதனைத் தொடர்ந்து தமிழின் 'கொடி' திரைப்படத்தின் தனுஷோடு இணைந்து நடித்துப் பல தமிழ் ரசிகர்களைப் பெற்றார்.
திரைப்படங்கள் வழியாக இல்லையென்றாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் எப்போதும் பொதுமக்களோடு தொடர்பில் இருப்பவர், சமீபத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு போஸ்ட் மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவர் பின்பற்றும் அழகு குறிப்புகளைப் பகிர்ந்து வரும் அனுபமா, சமீபத்தில் காபி தூள் மற்றும் தேன் கலந்த முகப்பொலிவுக்கான மாஸ்க் பற்றி பகிர்ந்திருந்தார். மேலும்,சுருட்டை முடியைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்றும் அதற்கான சிறப்பு நேரத்தை அவர் கண்டறிய வேண்டும் என்றும் பகிர்ந்துகொண்டார். மாதக் கணக்கில் தலைமுடியை சீவாமல் இருந்த நாட்களும் இருக்கிறதாம்.
அதேபோல மற்றவர்களைப்போல் வழக்கமாக அழகு நிலையங்களுக்குச் செல்லும் பழக்கம் இவருக்கு இல்லை. வீட்டிலிருந்தபடி அவரே வேக்சிங் மற்றும் த்ரெடிங் செய்துகொள்வாராம். மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே பார்லருக்குச் செல்வார்.
இதையெல்லாம்விட சமீபத்தில் இன்ஸ்டாவில் அவருடைய 'கருப்பு வெள்ளை' புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார். அதில் அவர் அணிந்திருந்த 30 ரூபாய் ஹயிலைட். நன்கு ஜூம் செய்யப்பட்ட அந்த புகைப்படத்திற்கான கேப்ஷனில், 'என் புன்னகையும் ரூ.30 காதணியும்' என்று குறிப்பிட்டிருந்தார். சாமானிய மக்களின் வரவேற்பு அதிகம் பெற்றதற்கான காரணம் அனுபமாவின் இந்த எளிமையான குணம்தான் என்று பலர் தங்களின் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.