Anushka Sharma Maternity Photo in swimwear: சாதாரண நாள்களைவிடப் பெண்கள் தங்களின் கர்ப்பகாலத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் தனக்குப் பிடித்ததையெல்லாம் சர்ப்ரைஸாக செய்துகொடுக்கும் கணவர் அமைந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பார்கள் வருங்கால அம்மாக்கள். அந்த வரிசையில் விரைவில் தாயாகப்போகும் அனுஷ்கா ஷர்மா அழகிய கறுப்பு ஸ்விம்சூட் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போதைய வலைத்தள வைரல் டாபிக்.
பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா, கடந்த மாதம் தன் கணவர் விராட் கோலியுடன் புகைப்படங்கள் எடுத்து, அவற்றோடு ‘இனி நாங்கள் மூவராகப் போகிறோம்” என்ற கேப்ஷனை இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்தப் படங்கள் உலகளவில் மிகவும் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர் இந்த ஸ்டார் ஜோடி.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கறுப்பு நிற Ruffled ஸ்விம்சூட் அணிந்து நீச்சல் குளத்தில் நின்றபடி ஒளிரும் புன்னகையுடன் அனுஷ்கா எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அடுத்த வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது. கருவுற்ற நாளிலிருந்து தன்னுள் இருக்கும் சிறிய கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் பெண்கள், பெரிய வயிற்றோடுத் தங்களைப் பார்க்க ஆவலோடுக் காத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நொடிகளை அழகிய ஆடைகளோடும் மிளிரும் புன்னகையோடும் புகைப்படங்களில் பிணைத்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.
அனுஷ்காவின் இந்த கியூட் படத்தோடு “எனக்கு இரக்கம் காட்டிய மற்றும் இந்த உலகில் நன்மைகள் இருக்கிறது என என்னை நம்ப வைத்த அனைவருக்கும் நன்றி. வரும்காலத்தில் அதேபோன்று நானும் இருக்கப் பயிற்சி எடுத்துக்கொள்வேன் என நம்புகிறேன்” என்ற கேப்ஷனை உலக நன்றியுணர்வு தினத்தையொட்டி (World Gratitude Day) இணைத்திருப்பது கூடுதல் ஹயிலைட்.
புடவையிலிருந்து வெஸ்டர்ன் உடைகள் வரை அனைத்திலும் பல்வேறு விதமான ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளை அமைத்த அனுஷ்கா, தற்போது ‘மகப்பேறு ஃபேஷன்’ இலக்குகளையும் நிர்ணயித்து வருகிறார். மேலும் பல அப்டேட்டுகளுக்கு அவருடைய ரசிகர்களும் வெயிட்டிங்!