இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவருவது வழக்கம். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அளவு கடந்து நேசிப்பது, அனுஷ்காவை விராட் விட்டுக் கொடுக்காமல் பேசுவது, விராட் கோலி ஆடும் போட்டிகளை அனுஷ்கா நேரில் வந்து பார்த்து அவரை உற்சாகப்படுத்துவது என ஏகப்பட்ட தருணங்களை சொல்லலாம்.
இந்நிலையில், விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனுஷ்கா சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.குறிப்பாக வீட்டில் கேப்டன் யார் என்ற கேள்விக்கு விராட் கூறியிருக்கும் பதில் நீங்களே பாருங்கள்..
,
விராட் கூறியதாவது, “ என் வாழ்க்கையில் அனுஷ்காவிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. வெற்றி தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் பங்கு கொள்வார். பல சர்ச்சைகள் இருந்தாலும் அரங்கத்திற்கு நேராக வந்து கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்ப்பது என எனக்காக அவர் செய்யும் செயல்கள் ஏராளம்.
என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது. முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்கு பெரிதும் உதவுவார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்.அனுஷ்கா தான் என்னுடைய பலமே” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
விராட் கோலியின் இந்த வீடியொ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.