கோலி வீட்டம்மாவுக்கு தில்லு ஜாஸ்தி: கர்ப்ப காலத்தில் சிரசாசனம்

Anushka Sharma Virat Kohli Viral Fitness Goals சமீபத்தில் தன் கணவர் விராட் கோலியின் உதவியோடு, ‘அனைத்து ஆசனங்களின் ராஜாவான சிர்சாசனம்’ செய்வதுபோன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Anushka Sharma Virat Kohli Sirsasana Viral Photo Pregnancy Fitness Goals Tamil News
Anushka Sharma Virat Kohli Fitness Goals

Pregnant Anushka Sharma Sirsasana Photo goes Viral Tamil News : எப்போதும் சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா, தன் திருமணம் முதல் கருத் தரித்த தருணங்கள் வரை அனைத்தையும் தன் ரசிகர்களோடு பகிர்ந்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது அனுஷ்கா கடுமையான யோகா செய்வதுபோன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா ஷர்மா பிஸியான நடிகை மட்டுமல்ல, யோகா ஆர்வலரும்கூட. உடல் நல்லதைப் பற்றி பலருக்கும் உபயோகமாகும் பல தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் அவர், சமீபத்தில் தன் கணவர் விராட் கோலியின் உதவியோடு, ‘அனைத்து ஆசனங்களின் ராஜாவான சிர்சாசனம்’ செய்வதுபோன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வயிற்றில் குழந்தையோடு இப்படிப்பட்ட கடுமையான ஆசனத்தை செய்யும் அனுஷ்காவின் இந்தப் புகைப்படம் பலருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று நினைத்தவர், அந்தப் புகைப்படத்தோடு சிறிய எச்சரிக்கைக் குறிப்பையும் இணைத்துள்ளார்.

32 வயதான அனுஷ்கா, “கைகளைக் கீழே ஊன்றியும் கால்களை மேலே உயர்த்தியும் செய்யும் இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்று. யோகா என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருந்ததால், நான் கர்ப்பமாவதற்கு முன்பு செய்த ஆசனங்களை செய்வதற்கு என் மருத்துவர் எனக்கு அனுமதி கொடுத்தார். ஆனால், கடுமையான திருப்பங்கள் மற்றும் தீவிர உடல் வளைவுகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் எச்சரித்தார். பல ஆண்டுகளாக நான் செய்து வரும் சிர்சாசனம் பொறுத்தவரை, சுவரை ஆதரவிற்காக இருக்கிறதா என்பதையும், என் சமநிலையை ஆதரிக்கும் என் திறமையான கணவர் கூடுதல் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்தேன். மேலும், இந்த ஆசனம் என்னுடைய யோகா ஆசிரியரின் மேற்பார்வையிலும் செய்யப்பட்டது. என்னுடைய கர்ப்ப காலத்திலும் என் பயிற்சியைத் தொடர முடிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற கேப்ஷனையும் இணைத்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

சிர்சாசனா உடலுக்கும் மனதுக்கும் ஒரு அமைதியான பயிற்சியாக அறியப்படுகிறது. இருந்தாலும், கர்ப்பகாலத்தில் எந்தவொரு சிக்கலையும் தவிர்ப்பதற்காகக் கர்ப்பம் தரித்த உடனே இந்த ஆசனத்தை மேற்கொள்ளாமல், ஆறு மாதம் முடிவடைந்தபின் இதுபோன்ற கடினமான ஆசனங்களைச் செய்யலாம் என்று அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anushka sharma virat kohli sirsasana viral photo pregnancy fitness goals tamil news

Next Story
கம கமன்னு வாசனை வீசும் ஹோட்டல் ரசம் ரகசியம் இதுதான்!hotel rasam recipe milagu rasam in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com