மன அழுத்தத்தைப் போக்கும் 4டி நுட்பம்...

4d technique : நான்கு டி நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, அழுத்தம் மற்றும் கவலைக்கு இடைவெளி கொடுங்கள் மனம், உடல் ரீதியான ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை...

மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். மன அழுத்தம் என்பது குறிப்பிட்ட காரணங்களால் வருவதாகும். கவலை என்பது கற்பனைக்கு எட்டாத வகையில் எதிர்கால எண்ணங்களைக் கொண்டதாகும்.

ஹிமானி கண்ணா

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஸ்டெரஸ்(stress) என்ற ஆங்கில வார்த்தையின் தோற்றம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அந்த உணர்வு எப்படி இருக்கும்? இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்து பணியாற்றுவது மற்றும் பெற்றோருக்கான கடமைகள் ஆகியவற்றில் சமநிலை கொள்ளும்போது மன அழுத்தம், கவலை போன்ற வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேட்கின்றோம். இப்போது நமது சொல்ல கராதியில் சேர்க்க அச்சம் என்ற வார்த்தையையும் உள்ளது. ஸ்டெரஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியின் ஸ்டிரிக்டிஸ் (strictis’)என்ற வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதன் அர்த்தம் இறுக்கம் என்பதாகும். இந்த பன்முக மன, அறிவாற்றல் நிலைகள் நமது உடலைப் பாதிக்கும், நமது உடலின் சமநிலைப்போக்கில் இடையூறு விளைவுகளே ஏற்படுத்தும். அழுத்தத்தை எதிர்கொள்ள நுட்பத்தைக் கற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அழுத்தம் என்பது மிதமான அல்லது சாதாரணமான உளவியல் மன அழுத்தமாக இருந்தால் அது நல்ல அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. நமது இலக்குகளை அடைய தூண்டுகோளாக இந்த அழுத்தம் அறியப்படுகிறது. துன்பம், வேதனையைத்தரும் அழுத்தம்தான் ஆரோக்கியமற்றது. இது நமது உடலின் செயல்பாட்டில் தொடர்ச்சியான சுழற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் நமது மன, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். மன அழுத்தம் என்பது குறிப்பிட்ட காரணங்கள் தொடர்பாக வருவது. கவலை என்பது கற்பனைக்கு எட்டாத வகையில் எதிர்கால எண்ணங்களைக் கொண்டது. அழுத்தத்தை பல்வேறு நுட்பங்கள் மூலம் நிர்வகிக்க முடியும். ஆனால், கவலை என்பது மருந்தியல் சிகிச்சை தேவைப்படுவதாக இருக்கும். அழுத்தம் என்பது குறுகிய காலம் கொண்டது. தூக்கத்தில் இடையூறு ஏற்படுத்தும், கவனக்குறைவு, இதற்கு சிகிச்சை பெறாமல் இருந்தால், இது கவலையாக மாறும் அது படபடப்பு, வியர்த்தல், பசியின்மை மற்றும் தூக்கக் கோளாறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாடுகளாக மாறும். இது நீண்டகாலத்துக்கு நீடித்தால், யாருக்கும் பயன்றறவர்களாக இருக்கின்றோம் மற்றும் தற்கொலை எண்ணம் என்பது போன்ற உணர்வுகளுக்கும் வழிவகுக்கும்.

அழுத்தம் மற்றும் கவலைகளைத் தடுக்க, நாம் எளிமையான 4 டி நுட்பத்தை பின்பற்றலாம். அதே போல குழந்தைகளும் இந்த இளம் வயதிலேயே அழுத்த த்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். முதல் டி என்பது ஆழமாக மூச்சை இழுத்து விடுதல் (deep breathing)என்பதாகும். அப்படி செய்யும்போது அழுத்தம் குறையும். எப்போதெல்லாம் நமது மனதில் பாதகமான எண்ணங்கள் தோன்றுகின்றனவோ அப்போதெல்லாம் சில முறைகள் ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விட்டு பயிற்சி செய்ய வேண்டும். சிந்தனையை புறக்கணிப்பதை விட ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது, மன அழுத்த மற்றும் கவலை நிலைக்குப் போவதில் இருந்து நம்மை நாம் தடுக்கின்றோம். இரண்டாவது டி (drink a glass of water)என்பது தண்ணீர் குடிக்க வேண்டும். பாதகமான எண்ணங்களின் சுழற்சியை தடுத்து, உங்கள் கவனத்தைத் திசை திருப்பும். போதுமான வழியில் எதிர் வினையாற்றுவதற்கு சில நொடிகளை உங்களுக்குக் கொடுக்கும். மூன்றாவது டி (delay)என்பது தாமதப்படுத்துதல் என்பதாகும்.

குறிப்பாக, ஒரு வேலையை செய்யும் போது நடுவில் உங்கள் மனதிடம், விரும்பத்தகாத எண்ணங்களை பெறுகிறீர்கள் என்று சொல்லுங்கள், கையில் உள்ள வேலையை முடித்து விட்டு, அதன் பின்னர் அந்த விஷயங்கள் குறித்து யோசிக்கலாம் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களின் பிரச்னைக்குரிய எண்ணங்களைத் தாமதப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள்; “என்னுடைய மனம் என்னுடைய உத்தரவுகளைப் பின்பற்றும் எனக்கு நானே என்னை, என்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதில் நன்றாக இருக்கின்றேன்.” இந்த எண்ணத்தை அடிக்கடி பலமுறைகள் சொல்லுங்கள். பாதகமான எண்ணங்கள் தோன்றுவதை இது தாமதப்படுத்த உதவும். இந்த பழக்கங்களை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் அவர்கள் அழுத்த த்தில் இருக்கும்போது இதனை நாடுவதற்குக் கற்றுக்கொள்வார்கள்.
இது கடைசியானது ஆனால், கீழானது அல்ல. நான்காவது டி (distract)என்பது திசைதிருப்புதல் என்பதாகும். உங்களை மகிழ்ச்சியாக அல்லது ஆர்வமாக வைத்திருக்கும் ஏதோ ஒன்றை செய்து உங்களை திசை திருப்ப உங்களுக்கு நீங்களே கற்றுக் கொள்ளுங்கள். செய்தி தொலைகாட்சிகளில் இருந்து அதிக அளவு தகவல்களால் திசைதிருப்பப்படுதல் மற்றும் மேலும் அதிக கவனமாக இருத்தல் மற்றும் மகிழ்ச்சியாக இருத்தலுக்கு உரையாடல் உதவக் கூடும். இந்த சமயங்களில் குழந்தைகள் பீதியை உணரும் போது அவர்களிடம் மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி பேசும்போது அவர்கள் கவனத்தை திசைதிருப்ப உதவியாக இருக்கும்.

இந்த நான்கு டி நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, அழுத்தம் மற்றும் கவலைக்கு இடைவெளி கொடுங்கள் மனம், உடல் ரீதியான ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ உங்களுக்கு நீங்களே உதவுவதுடன் உங்கள் குடும்பத்துக்கும் உதவுங்கள். நமது எண்ணங்களை நாம் முழுமையாக கட்டுப்படுத்துகின்றோம் என்பதை மறந்து விட வேண்டாம்.அந்த கட்டுப்பாட்டை நாம் இழந்து விட வேண்டாம். குழந்தைகள் உட்பட, உடல் ரீதியான மனரீதியிலான தனிநபர்களை கொண்ட ஒரு சமூகத்தை நாம் உருவாக்குவோம்.

(இந்த கட்டுரையின் எழுத்தாளர் குழந்தை மேம்பாட்டு மருத்துவர் மற்றும் கான்டினுவா கிட்ஸ் என்ற அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close