செம்ம சுவையான அப்பளக்குழம்பு ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
1 குழு கரண்டி நல்லெண்ணை
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
1 கொத்து கருவேப்பிலை
10 பூண்டு
அரை கப் சின்ன வெங்காயம்
1 கப் தக்காளி
உப்பு
2 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
புளி தண்ணீர்
பொறித்த அப்பளம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்க்கவும். தொடர்ந்த் கடுகு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் சின்ன பெருங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கிளரவும். 1 கப் தக்களி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் குழம்பு மிளகாய் தூள், புளி தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பொறித்த அப்பளத்தை சேர்த்து கிளரவும்.