எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் பலரும் ஆப்பிள் சிடர் வினிகர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது எடை குறைக்க உதவுமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இந்தக் வீடியோவில், ஆப்பிள் சிடர் வினிகர் என்றால் என்ன, அதன் செயல்பாட்டு முறை, அறிவியல் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன, மற்றும் அதன் உண்மையான பலன்கள் என்ன என்பதை விரிவாகப் பேசுகிறார் டாக்டர் அருண்குமார்.
Advertisment
பொதுவாக, ஆப்பிள் சிடர் வினிகர் பின்வரும் பயன்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது:
உடல் எடை குறைப்பு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல்
Advertisment
Advertisements
அறிவியல் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?
சமீபத்தில் லெபனானில் உடல் பருமன் கொண்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, ஆப்பிள் சிடர் வினிகர் மிதமான அளவில் எடை குறைப்புக்கு உதவலாம் என்பதைக் காட்டுகிறது. தினமும் அதிகபட்சம் 15 மில்லி ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக்கொண்டவர்களுக்கு, சராசரியாக 5-6 கிலோ எடை குறைந்ததும், பிஎம்ஐ (BMI) 1-1.5 புள்ளிகள் குறைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், மற்ற பல ஆய்வுகள் மிகக் குறைவான அல்லது குறிப்பிடத்தக்க எடை இழப்பு இல்லை என்று தெரிவிக்கின்றன.
சர்க்கரை அளவுகளைப் பொறுத்தவரை, ஆப்பிள் சிடர் வினிகர் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் வேகத்தைக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், இது மருந்துகளை நிறுத்தும் அளவுக்கு அல்லது மாவுச்சத்து குறைந்த உணவுமுறைக்கு இணையாக செயல்படாது. இது ஓக்லிபோஸ், அக்கார்போஸ் போன்ற குறைவான வீரியம் கொண்ட சர்க்கரை மாத்திரைகளுக்கு இணையான ஒரு விளைவை ஏற்படுத்தலாம்.
ஆப்பிள் சிடர் வினிகரை எப்படிப் பயன்படுத்துவது?
பொதுவாக, ஒரு கிளாஸ் (200-250 மி.லி) தண்ணீரில் 1-2 டீஸ்பூன் (சுமார் 10 மி.லி) ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடிக்கலாம். இதை உணவுக்கட்டுப்பாடுடன் எடுத்துக்கொள்வது, பசியைக் கட்டுப்படுத்தி எடை குறைப்புக்கு ஒரு கூடுதல் உதவியாக இருக்கலாம்.
முக்கியமான குறிப்பு:
எடை குறைப்புக்கு அடிப்படை, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிதான். ஆப்பிள் சிடர் வினிகர் போன்ற சப்ளிமென்ட்கள் ஒரு துணைப் பொருளாக மட்டுமே செயல்படும்
மேலும், ஆப்பிள் சிடர் வினிகருக்குப் பதிலாக எலுமிச்சை ஜூஸ் அல்லது புளிப்பு ரசம் போன்ற அமிலத்தன்மை கொண்ட பிற பொருட்களும் இதே போன்ற பசியைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே, அதிக பணம் செலவழித்து ஆப்பிள் சிடர் வினிகர் வாங்க வேண்டிய அவசியமில்லை. பசி எடுக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்குப் பதிலாக, ஒரு எலுமிச்சை ஜூஸ் (உப்பு சேர்த்து) குடிப்பது நல்ல பலனைத் தரும், என்று முடிக்கிறார் டாக்டர் அருண்குமார்.