சுவையான ஆப்பிள் அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான அளவு
சிவப்பு ஆப்பிள் – 2
சர்க்கரை – 2 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம், பிஸ்தா (துருவியது) – 2 டீஸ்பூன்
உலர்திராட்சை – 10
முந்திரி – 5
ஏலக்காய்த்தூள் – 2ஸ்பூன்
செய்முறை
முதலில் ஆப்பிளை அதன் தோலை சீவி துருவிக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடானதும் ஆப்பிள் துருவலைச் சேர்த்து அடுப்பைக் குறைத்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்து வதக்கி நன்கு திரண்டு வரும்போது பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தையும் சேர்த்து கலக்கவும். ஸ்லோ ப்ளேமில் வைத்து வதக்கி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“